பக்கம்:வீரபாண்டியம்.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. போர் மூண்ட படலம் 323 1814 இன்ன வீரர்கள் இவ்வகை ஏறியே மன்னன் உள்ளம் மகிழப் பொருதனர்: துன்னி வந்த படைகள் துளங்கின என்னி னிச்செய்வது? என்றயர்ந் தேங்கினர். 1815 படையு டைந்து படுகிலே நோக்கியே கடையி ருந்தவர் யாரும் கடுத்தனர் அடைய நின்ற படைகளே ஏற்றிமுன் மிடைய வந்தனர் வெஞ்சினம் மீறியே. (எ.எ) 1816 பத்தி செய்து படுசமர் பாங்குடன் ஒத்து நின்றெதிர் ஊக்கி உஞற்றிட வித்த கத்திற லோடு விதித்தவர் கொத்த மைந்து குறித்தெதிர் ஏறினர். (எ.அ) 1817 கரும ருங்துறு கைவெடி யாதிகள் பொரு வருந்திற லோடு பொருந்திமுன் வெருவ ருந்திற லோடு விரைந்தெதிர் ஒருவ ருந்தெரி யாவகை ஊக்கினர். (எ.கூ) 1818 விடங்கள் தோய்ந்தன: வெவ்வழல் காய்ந்தன: அடங்கொள் வேல்முத லானவை யாவுமே இடங்கள் தோறும் எழுந்து மிடைந்தன்; திடங்கொள் வீரர் சினந்து செருக்கினர். (அ0) வெள்ளை வீரர்கள் வெடிப்போர். 1819 கால்கள் மாற்றிக் கவாத்துகள் ஆற்றினர்; வேல்கள் ஏற்றி வெருகொளத் துற்றினர்; சூல்கொள் மேகங்கள் என்னத் தொடர்ந்துயர் மால்கொள் வெங்கரி மேல்கொண்டு மண்டினர். வெகுண்டு விரைந்தனர். 1820 கொல்லும் வெங்கொடுங் கூற்றென மண்டியே எல்லே யின்றி எழுந்துகா லாட்படை ஒல்லை வந்தெதிர் ஊக்கி உருத்திகல் வெல்லும் என்ன விரைந்து வெகுண்டதே.(அ.உ) 'கடை இருந்தவர் என்றது பின் அணியில் நின்று படை களே ஏவி வந்த தளபதிகளே. படை உடைந்து வரவே படைத் தலைவர்கள் வெகுண்டு விரைந்து மூண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/370&oldid=912885" இலிருந்து மீள்விக்கப்பட்டது