பக்கம்:வீரபாண்டியம்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. போர் மூண்ட படலம் 325 குதிரை ஏற்றம். 1827 தடக்கையில் நெடியவாள் தாங்கிச் சார்குசை இடக்கையில் எழிலுடன் பிடித்துக்காலினுல் தொடப்பொருக் குதிரையைத் தொடுத்தடக்கிமுன் நடத்திவந் தமர்முகம் கண்ணி னனரோ. (அ.கூ) படை மேல் பாய்ந்தது. 1828 சோமனேர் குதிரையில் தோன்றி ன்ைகொலோ: காமனேர் வர்சியில் கதுவி ன்ைகொலோ? மாமகன் இவன் என வந்த அக்குலக் கோமகன் படைஎதிர் கொதித்துப் போயினன். எதிரிகள் திகைத்தனர். 1829 இவன்வரு நிலையினை எதிர்ந்து கண்டனர்; கவனவே கத்துவெம் புரவி கால்களின் நவமுடன் நடைபயில் நளினம் நோக்கினர்: அவர் மிகத் திகைத்தனர்; அதிசயித்தனர். குதிரைப் படைகளின் போர். 1830 நீரின்மேலுறு நெருப்பெனப்பரியின்மேல்நிலவிப் போரின் மேலுறு வீரனைப் பார்த்ததும் பொருந்தார் பாரின் மேலுருப் பரிகளைப் பத்திசெய் துடனே சரி செய்துவெம் போரினில் ஊக்கினர் சதுராய். போர் வீரம். 1831 வாரும் வாரும்என்று எதிர்த்துமேல் நின்றவெம் படையை வீர வேட்கையால் விளித்துவெங் கூற்றென வெகுண்டு போரில் ஏறினன் பொருபரி துரண்டிமுன் புகுந்தான் : பாரில் வானினில் திசையிடை == விசைகொடு பறந்தான். (கூல்) குதிரையின் வேகம். 1832 குலால னுக்கிய திகிரியிற் கொட்புறத் திரிந்தே உலாவ ரும்பரி மேலுறைந் துலாவிய வீரன் நிலாவு விாளில்ை நெடும்படை நிலைகுலைந் தழிய வலாரி போல்வல சாரிகள் பலபல வகுத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/372&oldid=912887" இலிருந்து மீள்விக்கப்பட்டது