பக்கம்:வீரபாண்டியம்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. போர் மூண்ட படலம் 3.29. காலன் ஏறிவந்த கடும் பரி. 1846 அத்தலைவன் ஏறிவந்த அடலுடைவெம் பரிநிலையை அளந்து கூற எத்தலேவ ரானலும் இயலாதே; எத்தலையும் எளிதில் சுற்றித் தத்தியொரு நொடியில்வரும் தகவுடையது: அழகுடையது. அமரில் தேர்ந்தது: உத்தமருற் குணமுடையது: உரமுடையது: உம்பர்பதிக் குரியது: ஒன்றே. (ாஅ) வீரப் பரியின் விறல் நிலை. 1847 போர்முரசம் கேட்டவுடன் பொங்கியிரு செவிநெரித்துப் பொலிவு கூர்ந்து கார்முகிலேக் கண்டுமனம் களித்தாடு மயில் என்னக் களிப்புற் ருேங்கிப் பார்கிலேயில் பதியாமல் பரதமுடன் படுவேகம் படர்ந்து மேலே சார்தலைவன் கிலேநோக்கிச் சமர் நிலையில் மிகவூக்கிச் சார்ந்த தன்றே. (ாக) கதிவேகங்கள். 1848 கதிஐந்தும் சாரியையும் கைதேர்ந்த கடும் பரிமேல் காலன் ஏறி அதிவேக முடன்வரவே'அடுத்தபடை விரரெல்லாம் ஆற்றல் மிக்கு முதிர்வேக முடன் மூண்டு முனே முகத்தில் புகுந்தார்கள்: அரசன் சேனே கொதியாமுன் குதித்தேறிக் குறித்தெதிரக் கொடுஞ்சமரம் மூண்ட தன்றே. (ாம்) கெடிய போர். 1849 வாள்வீரர் வேல் வீரர் வல்லயத்தின் வல்வீரர் மழுக்கள் பாலம் ஆள்வீரர் கோல்விரர் அங்கங்கே தொடர்ந்தேறி அடர்ந்து தங்கள் 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/376&oldid=912891" இலிருந்து மீள்விக்கப்பட்டது