பக்கம்:வீரபாண்டியம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா வி ய சீ வி ய ம் క్రౌ வங்காளம் மகதம் மராடம் விராடம் கூர்ச்சரம் முதலிய வடநாடுகள் எங்கனும் யாதொரு எதிர்ப்பு மின்றி ஆங்கிலேயர் யாவும் கவர்ந்து கொண்டு களித்து ஆரவாரமாய் நீண்டு இத் தென் ட்ைடை அடைந்தனர். பாஞ்சை மன்னன் மூண்டது. விர பாண்டியன் ஒருவனே ஈண்டு மூண்டு எதிர்த் தான். முனேந்து பொருதான். முதலில் வெற்றி பெற். ருன். முடிவில் சதி வஞ்சனேகளால் மாண்டு போனன். அதன் பின்பு ஊமைத்துரை உருத்து எதிர்த்து உக்கிர வீர பராக்கிரமமாய்ப் போராடினன். இந்த விர இணுடைய அதிசய ஆற்றல்களே நோக்கி வெள்ளேயர்கள் எல்லாரும் உள்ளம் கலங்கினர். படைகள் மேல் படை களாய் வெள்ளம்போல் மூண்டு வந்தன. மூன்று முறை வந்த சேனைகள் மாண்டுபட்டன. முடிவில் கொடிய சதி புரிந்து கோட்டையைக் கவர்ந்துகொண்டனர். இவ்விரன் 2600 படை வீரர்களோடு வெளியேறி மறைந்தான். கி. பி. 1801 மே மாதம் 24ந் தேதி மாலே 6 மணி அளவில் இந்த வெளி ஏற்றம் நேர்ந்துள்ளது. அந்த வீரத் திறல்களேயும் போராட்ட நிலைகளையும் கருதி யுணர்வார் எவரும் உள்ளம் உருகி மறுகுவர்: உரிமை மீதுTர்ந்து பரிவு கூர்ந்து வருவர். யாவும் கருதி உணர்க. இமயம் முதல் குமரிவரையும் இந்தப் பரத கண்டத் துள் ஆங்கிலேயரை நேரே மூண்டு எதிர்த்தவர் யார்? முனைந்து பொருதவர் எவர்? பெரிய வெள்ளேத் தளபதியைக் கைதியாகப் பிடித்து வந்து தன் கோட்டையுள் எந்த மன்னன் இந்த நாட்டில் சிறை வைத்திருந்தான்? அந்தத் தானேத் தலைவன் மனைவி வந்து மறுகி வேண்டிய பொழுது உள்ளம் இரங்கி உடனே விடுதலை செய்து உதவி புரிந்தருளிய வீர வள்ளல் யார்: o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/38&oldid=912895" இலிருந்து மீள்விக்கப்பட்டது