பக்கம்:வீரபாண்டியம்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. போர் முண்ட படலம் 333. காலனும் இறந்தான். 1860 கருங்காலன் அங்காளில் செங்கால ல்ைவீழ்ந்த கதைபோல் இன்று பொருங்காலங் கருதியுயர் பரியேறிப் படையுடனே பொங்கி வந்த அருங்காலன் எனும்பெயர்கொள் வெண்காலன் அழிந்தான் என் ருர்த்த ஓசை இருங்கால எழுகடலின் பேரொலியாய் எங்கனுமே எழுந்த தன்றே. (ாஉஉ) 861 மேலான கும்பினிக்கு மேன்மையா யிருந்து பல வெற்றி கண்ட காலன் எனும் தளபதியும் கடுகிவந்த வெள்ளேயரும் கடிது வீழ்ந்து மாலுழந்து மாண்டொழிந்தார்; மற்றவர்கள் மீண்டிழிந்து மறுகி நின்ருர்: வேலனரு ளால்வென்று வெற்றிகண்டோம் என்றரசன் வியந்து கின்ருன். (ாஉங்) மாற்றலர் உடைந்தனர். 1862 எஞ்சிகின்ற படைவீரர் இரிந்தோடப் பிற்கட்டும் விரைந்து கூடி அஞ்சியுடன் அயலகன்ருன் அகல்வானில் அமர்நிலையை அமர்ந்து நோக்கி நெஞ்சுவங்த செங்கதிரோன் நிருபனுயர் வென்றியைமேல் நின்ருர் எல்லாம் தஞ்சமுடன் உணரவுரை தருவான்போல் தடங்கடலுள் குளித்த கன்ருன். (ாஉச) பொழுது அடைந்தது. 1863 போர்நோக்கி வெளிஎடுத்த பொங்கொளிகொள் செவ்வேலைப் பொருத பின்பு

  • கருங்காலன்=எமன். செங்காலன் சிவபெருமான். வெள்ளேக்காலன் பாஞ்சை வீரர் வேல்களால் ஈண்டு மாண்டு பட்டான். நீண்ட வெற்றி நிலவி நின்றது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/380&oldid=912896" இலிருந்து மீள்விக்கப்பட்டது