பக்கம்:வீரபாண்டியம்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 வீ ர ப ா ண் டி ய ம் நேர்நோக்கி உறைசெறிக்கும் நீர்மைபோல் கதிர்நீருள் மறைய வானம் பார்நோக்கிப் படுகளச்செங் குருதியினல் பயங்ததெனப் பசந்து தோன்றக் கார்நோக்கி வரகின்ற காவலன்மேல் நின்றவினே கருதிச் செய்தான். (ாஉடு) படுகளம் துடைத்தது. 1864 எழுநூறு தோட்டிகளே இனிதேவிப் படுகளத்தில் இறந்து பட்டுக் கழுதாரக் கிடக்கின்ற பிணக்காட்டைக் கடி தகற்றிக் களத்தை எல்லாம் பழுதாரப் பார்த்துவரு கெனப்பணித்தான் பணிந்தவர்போப்ப் பரிந்துள் ளேறி இழுதார எடுத்தகற்றி இடையிரவு முடியுமுன்னே எழுந்து வந்தார். (ாஉசு) அடுசமர் ஆறியது. 1865 வந்தவரை உவந்தனுப்பி மண்டியவெம் போரிலன்று மாண்டொழிந்து நொந்தவர்தம் கிளேகளே முன் நுனித்தறிந்து தனித்தனியே நோக்கி ஆய்ந்து வந்த பழி கிலேயினுக்கு மனம்வருந்தி யுயர்வென்றி வரவை ஒர்ந்து சிந்தையுவந் தறுமுகனேச் சிந்தித்து வினேவிளே வைத் தேர்ந்தி ருந்தான். (ாஉஎ) போர் நிகழ்ந்த காலம். 1866 : கொல்லம் தொளாயிரத் தெழுபத் தைந்தினில் சொல்லுசித் தார்த்தி தொடர்ந்த ஆவணி வல்லவெம் போரி து வந்து மூண்டது வெல்லுதலாய் இவர் விளங்கி நின்றனர்.

  • கொல்லம் ஆண்டு 97.5 சித்தார்த்தி வருடம் ஆவணி மாதம் பாஞ்சாலங்குறிச்சியில் இந்தப் போர் மூண்டது. ஆங்கிலேயர் கணக்குப்படி கி. பி. 1799 செப்டம்பர் மாதம் ஐந்தாந் தேதி (5-9-1799) ஆம். -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/381&oldid=912897" இலிருந்து மீள்விக்கப்பட்டது