பக்கம்:வீரபாண்டியம்.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. போர் மூண்ட படலம் 3.35. பொருது மாண்ட கேரம். 1867 நன்பகல் நாழிகை பத்தில் மூண்டது பின்பகல் நாழிகை இருபத்தெட்டினில் வன்பகை மாண்டது; வாகை குடியே மன்படை மனமிக மகிழ்ந்து நின்றது. (ாஉக) கால காலன். 1868 பாலன்மேல் வந்த அக் காலன் பண்ணவன் காலயல் ஓங்கவே கலங்கி வீழ்ந்தனன்: மாலுடன் வந்த இக் காலன் மன்னன்கை வேலுறு முன்னரே விழுந்து மாண்டனன் (ாகூ0) சேனைகளின் ஒழிவு. 1869 இன்றுவா நாளே வா என்று நாள் பல சென்றுதேய் வுறச்செயும் தீயர்தங்குடி பொன்றிய தென்னவே புகுந்த சேனேகள் ஒன்றுமீ ளாவகை ஒழிந்து போகவே. (ாங்க) போனவர் ஏங்கினர். 1870 போன அப் பிற்கட்டு புழுங்கி நொந்தனன்: மாணவேல் மன்னவன் மரபின் மாட்சியும் ஆனபோர்த் திறங்களும் அறிந்துள் அஞ்சின்ை: ஈனம்நேர்ங் ததுவென எண்ணி ஏங்கின்ை. 129 முற்பகல் பத்து மணிக்குப் போர் மூண்டது. பிற்பகல் 5, மணிக்கு முடிந்தது. மூண்ட இப் போரில் காலன் (Collins), l–fáiz srero (Douglas), L–Tilst hoře (Dormieux) பிளாக்கி (Blake), முதலிய படைத் தலைவர்களும் பல சிப்பாய்களும் இறந்து போயினர். எஞ்சி நின்றவர் பா8ளயங்கோட்டையை நோக்கிப் பறந்து போயினர். 130. மார்க்கண்டேயரைப் பற்ற வந்த காலன் மகாதேவர் கால்உதையால் மறிந்து வீழ்ந்தான். பாஞ்சை மன்னனைப் பிடிக்க வந்த காலன் வீரர் வேலால் விளிந்து மாய்ந்தான். 131. வஞ்ச நெஞ்சராய் வறியரைத் துயர் செய்யும் தீயவர் குடி மாய நேர்ந்ததுபோல் மருவலர் மாய்ந்து ஒழிந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/382&oldid=912898" இலிருந்து மீள்விக்கப்பட்டது