பக்கம்:வீரபாண்டியம்.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 வி ர பாண் டி ய ம் மன்னனும் எழுந்தான். 1882 பானுவந்து எழுந்ததும் பாஞ்சை வேந்தனும் தானுவந்து எழுந்தனன் சமரில் நேர்ந்து பின் போனவர் கிலேகளைப் பொருந்த எண்ணியே மானவி றுடனிவன் மதித்தி ருந்தனன். (ாசச, மருவலரை கினைந்தான். 1883 மூண்டவெம் போரிடை முரிந்து போனவர் வேண்டிய படைகளே விரைந்து சேர்த்துமே மீண்டிவண் வருவரேல் மீள லாவகை ஆண்டகை யுடன் அமர் ஆற்றல் வேண்டுமால். எதிர்வதை எண்ணினன். 1884 எதிர்வதை நாடியே யாவும் எண்ணினுன், அதிர்கழல் வீரரின் அவையைக் கூட்டினுன்: சதுருடன் ஆயவே சார்ந்து முந்தினான்: மதிவலோர் யாவரும் மருங்க டைங்தனர். (ாசசு) ஆவதை அய்க்தனர். 1885 வெற்றியங் திருவுடன் மேவி மன்னவன் முற்றிய மகிழ்வுடன் முதல் அமர்ந்தனன்; மற்றவர் யாவரும் வந்து கூடினர் * அற்றைநாள் ஆவதை ஆய்ந்திருந்தனர். (ாசன்) அதன்பின் கேர்ந்தது. 1886 இங்கிவர் இங்ங்னம் இருக்கப் பிள்ளேமேல் பொங்கிமுன் போனவப் பொருநர் செய்கையும் தங்கிய தன்மையும் சார்ந்த வன்மையும் அங்குற அமைந்ததும் அறிந்து மேற்செல்வாம். கசு - வது போர் மூண்ட படலம் முற்றிற்று. ஆகக் கவி 1886. முதல் நாள் போரில் வெற்றி கண்டான். மறுநாள் (6-9-1799) வந்தது. பொருது உடைந்து போன வெள் ளேயர் நெடிய படைகளைத் திரட்டி மீண்டு போரா டவரினும் வருவர்; ஆவ்வாறு வந்தால் ஆற்ற வேண்டிய திறங்கள்ேக் குறித்து வீரர்களுடன் விவேகமாய் ஆராய்ந்திருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/385&oldid=912901" இலிருந்து மீள்விக்கப்பட்டது