பக்கம்:வீரபாண்டியம்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. தானுபதி தப்பி வந்த படலம் 341 போருள் மறைந்தார். 1896 போருற அஞ்சிநெற் போருள் புக்கவண் யாருமே அறிவுரு வகைய மர்ந்தனன்; பாருயர் புகழுறு பாஞ்சை மாநகர் நேருற நினேந்தனன் நெடிது நாடியே. (க0) விரைந்து வந்தார். 1897 ஆம்பரி சின்னதென்று அறிகி லாதுளம் தேம்பினன் திகைத்தனன் தியங்கித் தேர்ந்து பின் வாம்பரி ஒன்றின் மேல் வாவி மண்டியே வேம்பரி வோடிவண் விரைந்து வந்தனன். (க.க) ககர் அடைந்தார். 1898 அல்லினில் வல்விரைந்து அமைச்சன் அச்சமாய் ஒல்லேயில் புரவியை ஊக்கித் துரண்டியே எல்லெழு பொழுதிடை எய்தின்ை பின்பு கல்லகண் பகல்வந்து நகர் அடைந்தனன். (கஉ) மன்னனைக் கண்டார். 1899 பாஞ்சையம் பதிவந்து புகுந்து மன்னனை வாஞ்சையாக் கண்டுமுன் வணங்கி நின்றனன்; ஆஞ்சையை மீறியே அமர்வி 8ளத்தவர் தாஞ்செய்த செயலெலாம் சார்ந்து கூறினன். உற்ற துயர்களை உரைத்தார். 1900 மக்களே மனேவியை மருவி கின்றதன் ஒக்கலேச் சிறைபிடித் தோங்கி ஒன்னலர் மிக்கவெங் திறலுடன் விரைந்து சென்றதும் துக்கமுற் றுள்ளதும் சோர்ந்து சொல்லினன்.

  • பகைவர் புகுந்ததை அறிந்ததும் பயந்து ஒதுங்கிக் கொல்லேப் புறத்தில் குவித்திருந்த வைக்கோல் போருள் புகுந்து ஒளிந்திருந்தார். அந்த ஒளிவினை இது விழி தெரிய விளக்கியுள்ளது. போர் = வைக்கோல் பொதி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/388&oldid=912904" இலிருந்து மீள்விக்கப்பட்டது