பக்கம்:வீரபாண்டியம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. கா வி ய சி வி ய ம் பகைவராய் மூண்டு போராட நேர்ந்த வெள்ளே பரும் உள்ளம் வியந்து உவந்து புகழ்ந்துள்ளது யாரை? “One of the most extraordinary mortals I ever knew” (R. G.) "நான் அறிந்த எவரினும் இவர் மிகவும் அதிசய மான ஒர் அற்புத மனிதர்' என்று ஊமைத்துரையைக் குறித்துச் சேகீனத் தலைவன் ஆன சீமைத்துரை உள்ளம் திறந்து இப்படி உரைத்திருப்பது எத்தகைய மதிப்பு: எத்துணே வியப்பு: இத்தகைய வீரத்திறல்களே உய்த் துணர்ந்து ஒர்ந்து சிந்திக்க வேண்டாமா? இந்த நாட்டு அரசினரும் இளேஞரும் முதியரும் மகளிரும் இந்த வீர காவியத் தின் மகிமை மாண்புகளே உரிமையுடன் மதித்துப் போற்ற வேண்டாமா? தேசத்துக்காக மான வீரத்தோடு செய்துள்ள நன்றியை மறக்கலாமா? மறவாமல் மதித்து வருவதே நாட்டுக்கு மதிப்பாம். அயலே வருகிற ஆங்கிலக் குறிப்பைப் பாங்கோடு படித்துப் பரிவோடு சிந்திக்க வேண்டும். “For the most disinterested and purest patriotism ‘’ "சிறிதும் தன் நலம் கருதாத பரிசுத்தமான தேசாபி மானத்துக்காகவே' இவர் போராடி அரசை இழங். துள்ளனர். ஆங்கிலப் படைகளின் தளபதி குறித்துள்ள இந்த ஆங்கில வாசகத்தை ஊன்றி உணர்பவர் உள்ளம் தெளிந்து உருகிப் போற்றுவர்.

  • பகைமை யாளர்களும் பரிந்து வியந்து புகழ்ந்து போற் றும்படி இவ்விரர்களுடைய வீ. வரலாறுகள் விழுமிய நிலை யில் விளங்கியுள்ளன.
  • பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் முதல் பாகமும், இரண்டாம் பாகமும் 800 பக்கங்கள் உடையன. அரிய பல ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் ஆங்கில ஆதாரங்களுடனும் தெளிவான இனிய வசன நடையில் வெளிவந்துள்ளன . அந்த இரண்டு தொகுதிகளேயும் அறிந்துகொண்டால் இந்த விர காவியத்தின் கவிகளில் சுவை சுரந்து வந்துள்ள சரித்திரத்தைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/39&oldid=912906" இலிருந்து மீள்விக்கப்பட்டது