பக்கம்:வீரபாண்டியம்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 வி ர பாண் டி ய ம் பற்றிய துயரம். 1913 நீண்டநாள் வெறுப்பினில் நிமிர்ந்து வந்தவர் ஆண்டவர் நெல்லினே அள்ள நேர்ந்தனர்; மூண்டவெம் படைவந்து முனைந்து முட்டவே ஈண்டிய துயர்களே எண்ணி ஏங்கினர். (உ.எ) தம்பியர் வந்தது. 1914 அன்னவர் வருந்தியவ் வாறி ருக்கவே இன்னருள் முருகனே இறைஞ்ச எண்ணியே பொன்னுெளிர் செந்தியில் போயி ருந்தகம் மன்னவன் தம்பியர் வந்து சேர்ந்தனர். (உ.அ) இன்னல் உழந்தனர். 1915 முன்னேநாள் மூண்டவச் சண்டை தன்னேயிம் மன்னிளங் குமரர்கள் அறிந்து வல்விாைந்து இன்னலோ டெய்தினர் எய்தி அண்ணல்தன் பொன்னடி தொழுதனர் பொங்கி நின்றனர். இனைந்து மொழிந்தனர் 1916 சிங்கங்கள் உறுமிய செய்கை போலிரு தங்கவொண் பதுமைகள் போன்ற தம்பியர் செங்கண ராய்ச்சினங் துரைத்த போதினில் அங்கண்கின்றவரெலாம் அஞ்சலாயினர். (டி0) எண்ணி இருந்தனர். 1917 உற்றதோர் போரினில் உதவி யின்றியே பெற்றதோர் துணே எனப் பெருகி நின்றனம் முற்றவும் நன்றென முனிந்து முன்னவன் வெற்றியை நினைந்துளம் விழைந்து நின்றனர். அரசனுக்குத் தம்பியர் இருவர். தளவாய்க் குமாரசாமி, துரைச்சிங்கம் என்னும் பேரினர். ஆவணிமூலத் திருவிழா வைமுன்னிட்டு வழக்கப்படி முருகக்கடவுளேத்தொழுதுவரத் திருசெந்துாருக்குப் போயிருந்தனர். இங்கே மூண்ட சண் ட்ையைக் கேள்வியுற்றனர். மீண்டு விரைந்து வந்து நிகழ்ந் ததையறிந்து நெஞ்சம் வருந்தி நிலை தெளிந்திருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/391&oldid=912909" இலிருந்து மீள்விக்கப்பட்டது