பக்கம்:வீரபாண்டியம்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 வி ர பாண் டி ய ம் அன்னை கூறிய அறிவுரைகள். 1956 அறதிே வழுவாமல் மனுநெறியாய் இதுவரையும் ஆண்டு வந்து பெறலரிய பெருநலன்கள் பெற்றிந்தப் பெரும்பதியில் பெருகி யுள்ளோம்: விறலுறுவன் திசைவென்ற வில்விசயன் திருமகனே! வினையாய் மூண்டு மறமுடன் போய்க் கொள்ளே செய்து பிள்ளேமகன் அல்லல்மிக வளர்த்து விட்டான். (ங்) பிள்ளை செய்த பிழை. 1957 நெல்லெடுத்த தீவினையால் நேசமாய் நின்றவெள்ளே நிருபர் எல்லாம் கல்லெடுத்த பகையாகிக் கடற்படையோடு அடர்ந்துவங்து கடும்போர் மூண்டார்: எல்லெடுத்த படைவீரர் எத்தனைபேர் இருதிறத்தும் இறந்தார் அங்தோ! இல்லெடுத்துப் போயினர் என்று எங்குகின்ருன் பிள்ளே மகன் எள்ளல்! என்னே! (ச) பிழையாளன் பேச்சைக் கேளாதே. 1958 வெள்ளாளன் பெற்றமகன் வீற்றிருந்த ஊரைவங்து வெள்ளே யாளர் எள்ளாத படைகளுடன் எதிர்வ8ளய இல்லையிழந்து ஓடி வந்தான்; 3. வீரபாண்டியன் தந்தையின் பெயர் திக்குவிசயத்துரை ஆதலால் *வில்விசயன் திருமகனே!’’ என்ருள். தானு பதியைப் பிள்ளே மகன் என்று செல்லமா அ ைழ த் து வருவது அரண்மனை யாருள் வழக்கமா யிருந்தது. 4. உறவாயிருந்த கும்பினியார் பகையாய் மூண்டதை நினைந்து அன்னே இன்னல் உழந்துள்ளாள். உரைகள் அந்த உள்ளத்தின் துயரங்களே வெளிப்படுத்தி யுள்ளன. 5. தன் மனைவியை இழந்துவிட்டுப் பிள்ளே பிழையாய் ஓடி வந்திருப்பது பேடித்தனம் என்று வருந்தி யிருக்கிருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/399&oldid=912917" இலிருந்து மீள்விக்கப்பட்டது