பக்கம்:வீரபாண்டியம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா வி ய சி வி ய ம் 4 I இங்காட்டு வீரம் எங்காட்டுக்கும் பேரொளியை நீட்டிப் பெரு மகிமைகளே விளக்கியுள்ளது. அந்த உண்மைகளே எல்லாம் இந்த வீர காவியத்துள் வியந்து விழைந்து _ண்டு உணர்ந்து உவந்து கொள்ளலாம். வீரம் கொடை நீதி ஞானம் முதலிய மேலான ர்ேமைகளில் இந்த நாடு பண்டு தொட்டே மேன்மை அடைந்து வந்துள்ளது. ஆடவரே அன்றிப் பெண்டிரும் பேராண்மையைப் பேணி வந்துள்ளனர். அந்த உண்மை க8ளப் பழைய தேச சரித்திரங்கள் கிழமையாய்க் கிளர்ந்து காட்டி யுள்ளன. அவற்றுள் ஒன்றை இங்கே காண வருகின் ருேம். ஒரு மகனைப் பொருமுகம் உய்த்த தாய். ஒருமகன் அன்றி வேறே உறுதுணை யாதும் இல்லாள்; மருவலர் வந்த போது மன்னவற்கு உதவி ஆகப் பொருமுகம் புகுந்து போரில் பொருதுவா! என்று சேயைப் பரிவுடன் உய்த்த தாயர் பலர் இங்கே பண்டிருந்தார். குறிப்பு. ஒரு முதியவள்; மதிநலம் உடையவள்: மானமும் விரமும் மருவிய உருவினள். அவள் மரபில் பிறந்த ஆடவர் எவரும் வீரர்கள் ஆதலால் வீரக்குடி என அந்தக் குடும்பம் சீருடன் விளங்கி வந்தது. பகைவரால் தன் நாட்டுக்கு நேர்ந்த கேட்டை நீக்க அவள் தங்தை போருக்குப் போனன் : மூண்டு பொரு தான்; முடிவில் மாண்டு போனன். சில ஆண்டுகள் கழிந்தன. பின்பு ஒரு போர் நேர்ந்தது: அதில் அவளு டைய கணவன் சென்று அடலாண்மைகளோடு அமராடி ஞன்; எதிரிகள் பலரை முதிர் வேகத்தோடு வென்ருன் : இறுதியில் அங்கே அவன் இறந்து போன்ை. அதன் பின்பு ஒரு பெரும் போர் மூண்டது. அரசுக் கும் தன் நாட்டுக்கும் உதவி புரிய வேண்டுமே! என்று அந்தக் கிழவி எண்ணினுள். தனக்கு ஒரே ஒரு மகன் இருந்தான்; அவனுக்கு அப்பொழுது இருபது வயது - 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/40&oldid=912919" இலிருந்து மீள்விக்கப்பட்டது