பக்கம்:வீரபாண்டியம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கா வி ய சீ வி ய ம் கூட நிறைய வில்லை. தனது அருமை மகனே உரிமை யுடன் அழைத்தாள்: "மகனே! இன்று நீ போருக்குப் போக வேண்டும்; யாருக்கும் அஞ்சாத வீரக் குடியில் பிறந்த நீ விரைந்து செல்க: வென்று வருக!' என்று பனிைத்தாள். அவனும் ஆர்வத்தோடு உவந்து இசைங் தான். இசையவே அவனது தலையை வாரி முடித்தாள்: வெள்ளே வேட்டியை எடுத்து அவன் இடையில் இறுக்கி உடுத்தினுள். கூரிய வேலாயுதத்தைச் சீருடன் போற்றி அவன் கையில் கொடுத்தாள்: 'செருமுகம் சென்று செறுநரை வென்று வெற்றி பெற்று வருக!' என்று வேல் முருகனேக் கருதி உறுதியோடு விடுத்தாள். 'செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇப், பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒருமகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே!’’ ஆயிரத் தெண்னுாறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாடு இருந்த கிலேமையும், வீர மக்களும், வீரத் தாயரும், வீறுடன் விளங்கி நின்ற தலைமையும் கண்டு உளம் மிக வியந்து கொள்கின்ருேம். உரைகளில் மருவி யுள்ள உணர்ச்சிகள் வீர ஒளிகளே வெளியே வீசி யுள்ளன. யாவும் கருதி யுணர உரியன. செருப்பறை=போர் முரசம். வெளிது=வெள்ளேயான ஆடை. உடீஇ= உடுத்தி. பாறுமயிர்=சிதறியிருந்த உரோமம். குடுமி=சிகை: மயிர்முடி. செல்க=சென்று வென்று வா. விடுமே! என்றதிலுள்ள ஏகாரம் வியப்பை விளேத் துளது. தொனிக் குறிப்புகள் துணித்துணரத் தக்கன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/41&oldid=912930" இலிருந்து மீள்விக்கப்பட்டது