பக்கம்:வீரபாண்டியம்.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 வி ர பாண் டி ய ம் உன்னரிய கொலேத்துக்கை இன்னவகை யுடனியற்றி உலகொ டுக்கித் தன்னரசு கொண்டிங்கே தருக்கியிருங் தான்; முன்னம் தாவிப் போன மன்னனிலே இன்னதென வல்விரைந்து நாமினிமேல் வருந்திக் காண்பாம்: (டுக ) வெற்றி வீரன் விரைந்தது. 2010 சுற்றி நின்ற படையைத் துணித்துமுன் வெற்றி வெந்திற லோடு விரைந்தவன் அற்றை நாள் பதின் காவதம் போனதால் மற்றை ஏழு பரிகளும் மாண்டன. (டுள) குதிரையின் கதிவேகம். 2011 கண்ணும் உள்ளமும் காண்டற் கரியதோர் எண்ணில் வேகத் தெழுந்து பறந்தன; விண்ணில் மேவிய வெம்பரி வேறிடை மண்ணில் வீழ்ந்து மறிந்தன போன்றன. (டுஅ) முத்துராமன் முடிவு. 2012 முத்து ராமென முன்பெயர் பெற்றவத் தத்து வாம்பரி தன்குடல் அற்றிடை செத்து வீழ்ந்ததைக் கண்டதும் மன்னவன் சித்தம் நொந்து தியங்கி மறுகினன். (டுக) 2013 வாயு வென்ன மனம் எனப் பாயுமத் தூய ஒண்பரி துள்ளி இறந்ததைச் சீய மன்னவன் கண்டு தெருமந்து மாய நேர்ந்த வகை என மாழ்கின்ை. (சும்) 56.கோலார்பட்டியிலிருந்து தப்பி ஆறு குதிரை வீரர்களோடு தனது பட்டத்துக் குதிரையில் ஏறி விருேடு தாவிப்போன விர மன்னன் நிலைமையை இனி அறிய வருகிருேம். 59 மன்னன் ஏறிப் போன பட்டத்துக் குதிரைக்கு முத்துராமு. என்று பேர். வெள்ளே நிறம் உடையது. அழகும் வேகமும் அறிவும் உடையது. அதிசய நிலையது; அழிவுற நேர்ந்தது. 60 உரிய பரி மாய்ந்து போகவே தன் உயிர் மாய்ந்தது போல் உள்ளம் ஓய்ந்து உறுதி குலைந்து வீரன் தேம்பின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/417&oldid=912938" இலிருந்து மீள்விக்கப்பட்டது