பக்கம்:வீரபாண்டியம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா வி ய சீ வி ய ம் 43 வென்று மீளுக. போரிடைப் பொருது வென்று புகழுடன் மீள்க; அன்றேல் சிருடை அரசும் நாடும் திசைகளும் இசைமீக் கூர நீருடை உலகில் நின் பேர் நிலைத்திட நேரே மாள்க; பாரிடை நின்னை ஈன்ற பயன் எனக்கு அருள் க என் ருள். குறிப்பு. ஒரு வீரத்தாய் தன் மகனைப் போருக்கு அனுப்பும் போது இவ்வாறு கூறியுள்ளாள். உரைகளில் உறைங் துள்ள உறுதி நிலைகளேயும் உணர்ச்சிகளையும் வீரத் துடிப்புகளேயும் ஒர்ந்து உணர்பவர் உள்ளம் பரிந்து வியங்து கொள்வர். பகைவரைப் போரில் வென்ருல் வெற்றித் திருவுடன் மீண்டு வருக; வெல்ல முடியவில்லையானுல் உன் வீரப் புகழ் விண்ணும் மண்ணும் விளங்கி வர ஆண்டே மாண்டு போக! என்று மான வீருேடு உரைத்திருக் கிருள். பெற்ற தாயின் வீரம் பிள் 8ளப் பாசத்தையும் கடந்து வெற்றி வீருேடு விளங்கியுள்ளது. இத்தகைய தாய்மார்களின் தங்கக்கட்டி வயிறுகளி லிருந்தே அத்தகைய சிங்கக் குட்டிகள் பிறந்து வந்துள் ளன. வீரர்களுடைய பிறப்புகளும் சிறப்புகளும் வினைத் திறங்களும் வியப்புகளே விளேத்து வருகின்றன. போரில் ஏறின்ை புகழில் ஏறினன். ஆர்ந்தபேர் அரசுக் கேனும் அரியதன் நாட்டுக் கேனும் நேர்ந்த பேர் இடரை நீக்க நெஞ்சுரம் தோய்ந்து நேரே ஒர்ந்துபோய்ப் போரில் ஏறும் ஒருவனே உலகில் என்றும் தேர்ந்துயர் புகழில் ஏறித் தேசுடன் திகழ்வன் நின்றே. குறிப்பு. ஒரு மனிதன் ஆற்றி வருகிற அரிய பெரிய செயல் களால் அவன் பெயரை உலகத்தார் உவந்து புகழ்ந்து வருவது புகழ் என வந்தது. இசை பெற வாழ வில்லையா ல்ை அந்த வாழ்வு எந்த வழியும் இழிந்து வசையுற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/42&oldid=912941" இலிருந்து மீள்விக்கப்பட்டது