பக்கம்:வீரபாண்டியம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கா வி ய சீ வி ய ம் நேர்கிறது. வாழ்வு மணம் பெற வாழ்ந்தவனே வையம் வணங்கி வாழ்த்த வருகிருன். சிறந்த பிறவிக்குப் பயன் உயர்ந்த புகழை அடைந்து கொள்வதேயாம். கல்வி அறிவு கொடை சீலம் முதலியவற்ருல் புகழை அடையலாம்; ஆயினும் வீரத் தால் விளேந்து வருகிற புகழையே ஞாலத்தார் விரைந்து வியந்து போற்றி வருகின்றனர். அரசுக்கும் காட்டுக்கும் இடையூருக மாற்ருர் மாருய்ப் போராட மூண்டபோது அவரை எதிர்த்து நேரே வீருேடு போராடி வென்று தேச மக்கள் யாவரை யும் பாதுகாப்பவர் வீரர்களே ஆதலால் அவருடைய பேரும் புகழும் எங்கும் பெருகி விளங்குகின்றன. பகைவரைப் பொருது வெல்ல நேர்தல் அ ரி ய செயல் ஆதலால் அதனைச் செய்தவர் பெரிய வெற்றி வீரராய்ப் பெரும் புகழ் பெற்று கிற்கின்றனர். போரில் ஏறின்ை புகழில் ஏறின்ை என்றதல்ை அந்த ஏற்றத்தைப் பெற வுரியவர் வீரரே என்பது இங்கு நன்கு விளங்கி நின்றது. பிறந்த பிறப்பு சிறந்த வீரத்தால் உயர்ந்து வரு கிறது. நெஞ்சம் அஞ்சாமை, நிலைகுலையாமை, நேர்மை, முதலிய நீர்மைகளே வீரர்களின் சீர்மைகளாய் விளங்கி யாண்டும் வியன விரிந்து வந்துள்ளன. வில்லாலும் சொல்லாலும் உலகை எல்லாம் வெல்லவல்ல வீரர் ஆன | - நல்லார்கள் பலர்தோன்றி நண்ணிநின்ற நன்னடே நந்நாடு என்ன எங் காடும் இக் காட்டை இன்னவாறு வி ய ந் து புகழ்ந்து வர இது சிறந்து உயர்ந்துவந்துள்ளது. இந்த நாட்டு வீரர்களுடைய அருந்திறல் ஆண்மை களும் பெரும் போர் மேன்மைகளும் யாண்டும் அதிசய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/43&oldid=912952" இலிருந்து மீள்விக்கப்பட்டது