பக்கம்:வீரபாண்டியம்.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38.4 வி ர ப ா ண் டி ய ம் மதுரைமா நகரை அடைந்தார். 2079 வருகின்ற வழியிடையே மன்னனுயர் மரபினர்கள் பொருகின்ற திறலோடு புகுந்திடுவர் என்று பயந்து அருகெங்கும் இடையிடையே அயல்நோக்கி அதிவிரை (வாய்ச் செருவென்ற செழிப்போடு தென் மதுரைப் பதிசேர்ந்தார். எட்டப்பன் களித்துப் போன்ை. 2080 கட்ட பொம்மு பிடிபட்டான் என்றவுடன் எட்டப்பன் அட்ட திக்கும் பெற்றவன் போல் அடங்காத களிப்பேறி வட்டமிட்டு வாசிதட்டி வாவியே தளபதி பால் இட்டமுடன் எதிருரைக்க எழுந்தோடி எய்தின்ை. சேனைத் தலைவன் தெரிந்து மகிழ்ந்தான். 2081 ஒடிவங்து பேனமன் முன் உற்றநிலை யுடனுரைத் தான், கோடிவங்து கிடைத்ததுபோல் கொண்டாடி அவன் (மகிழ்ந்தான்; கூடியிரு வரும்களித்தார்; குடிகேடே யுளம்நினேங்து காடியதைச் செயவிழைந்து நவையோடு மிகவிரைந்தார். கயத்தாறு புகுந்தான். 2082 நாகலா புரமிருந்து நயந்துகயத் தாறடைந்து வேகமுடன் விரகெண்ணி மேலோர்க்கு மிகவெழுதி ஒகையுறு பிற்கட்டை யுடன்கொண்டு சேனேயர்கோன் வாகையுறப் பெற்றவன் போல் வன்மமுள் ளே மூண் டுசெய் (தான். பாளையகாரர்களை வரப் பணித்தான். 2083 சிற்றரசர் எல்லாரும் சேரவங்து கயத்தாறுரர் உற்றடைய வேண்டுமென உறுதினத்தை யுடன்குறித்துப் பற்றெழுதி விரைவாகப் பாரெங்கும் பரப்பினுன் அற்றைவினை எதிர் எண்ணி அடலுடனே அமர்ந்திருந்தான். மன்னன் மதுரையில் இருந்தான். 2984 பேனமன் இவ் வாறங்குப் பிழைபுரிந்து பெருகிநிற்கக் கானவர்தம் கொடுவலேயில் கடிதாக அகப்பட்ட மானவரிப் புலிபோல மன்னவனும் தம்பியரும் வானமுயர் பெருமையுறு மதுரைமா நகர் இருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/431&oldid=912954" இலிருந்து மீள்விக்கப்பட்டது