பக்கம்:வீரபாண்டியம்.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 வி ர பாண் டிய ம் தீயவர் எதிரே மாயவா? 2159 தெவ்வர் கையிடைத் தீமையாய்ச் சிக்கிய போதே அவ்விடத்திலே அமர்புரிந் தழிந்திடா தடைந்தேன்; இவ்வி டத்திலே இவ்வகை இழிவுகள் கண்டேன்; வெவ்வி உத்தினும் கொடியவெங் தியவர் எதிரே. (60) கடமையைக் கருதி அடங்கினேன். 2160 இக்க ணத்தினும் எறுழ்வலி மடங்கல் போல் பாய்ந்து பக்கம் நீண்டுள பகைவரைப் படுத்துயிர் குடித்துத் தக்க என்திரு.நகரினேச் சாருவேன்; தடையாய்க் கைக்க டைந்தபின் கடப்பது கடைஎனக் கழித்தேன். இழிந்து வாழுங்கள். 2161 குனிந்து கும்பிட்டுக் கோட்சொல்லி இச்சகம் பேசி வனேந்து தம்முடல் வளர்க்கின்ற வசையுடை யார் முன் புனேந்து தன் குல வீரமே பூண்டமன் ஒருவன் இனேங்து காணியே இறந்தனன் என்பதும் இசையே. ஈனப் பேடிகளே ! 2162 எட்டை யாபுரத் தானேயும் இயல்சிவ கிரியைக் கட்டி யாள்பவன் கடுமன வன்னியன் என்னும் பட்ட முற்றுள பாளேயத் தானேயும் பழிசேர் மட்டி யானபுன் பேடிகாள்! என வலித் திகழ்ந்தான். (6.3) பேடிகள் இடையே வீரன் இருக்கலாமா? 2163 பேடி யாளராய்ப் பெருகிமுன் னிற்பவர் இங்கே கூடி வாழலாம் அன்றியே கோக்குல வீரம் குடி யுள்ளவர் துணிவுடன் அயலிடம் தொடர்ந்து நீடி நிற்றலே கலம் எனும் கிலேயைநேர் கண்டேன். (64) கரிகளுடன் அரி ஏறு அமருமா? 21.64 நரிகள் கூடிவா ழிடத்தினில் நலமிகு திறலார் அரியின் ஏறுரு தருவருத் தகன்றிடும் அன்றே: மருவு கோழைகள் மண்டிய நிலத்தினில் மானத் திருவ மைந்தநற் குலமகன் சேர்ந்திடான் சிறிதும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/447&oldid=912971" இலிருந்து மீள்விக்கப்பட்டது