பக்கம்:வீரபாண்டியம்.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 வி ர பாண் டி ய ம் உலகம் எங்கும் இரங்கியது. 21.91 என்றுமக்கள் எவ்வழியும் இவ்வீரர்க்கு எய்தியதை எண்ணி எண்ணிக் கன்றியவெங் துயரோடு காலத்தின் விளைவுகளைக் கருதி நொந்தார்: அன்றெவரும் இம்மன்னன் ஆண்மைகளே வியந்தாலும் அழிவை நோக்கி ஒன்றியுளம் உளேந்திருந்தார்: உலகமெங்கும் ஒர் இரக்கம் ஓங்கிற் றன்றே. (92) மன்னன் தேவி மறுகிப் புலம்பியது. 219.2 மன்னனங்கே மாண்டசெய்தி மனேவியிங்கே கேட்டவுடன் மயங்கி மாழ்கித் தன்னுயிர்போய் ஒழிந்ததெனச் சாய்ந்துகெடும் போதுயிர்ப்புத் தான்போய் மீண்டு மின்னலிளங் கொடிநிலத்தில் வீழ்ந்துருள்வ தெனப்புரண்டு வீணே நான இன்னிசைவேய்ங் குழலினைய இருந்தமொழி வருந்தியழு தேங்க லாள்ை. (93) பெரு வீரம் பேடியர் முன் பேர்ந்ததே ! 2293 கோடிசனம் நிறைந்திருக்கக் குலககரம் நிலைத்திருக்கக் கொற்றம் இல்லாப் பேடியர் முன் பிழையாகப் பிழையாத பெருவிரம் பிழைத்து நீயும் வீடினேயே விறல்மத!ை இதையறிந்தும் என் ஆவி வீயா தின்னும் கிடியுடல் நிலைத்துளதே நிலைதெரியாக் கொடுவி&னயின் நிலைதான் என்னே: (94) எழில்கள் எல்லாம் எங்கே? 219.4 கோலமுழு மதியனேய திருமுகத்தின் பொலிவெங்கே: குலத்தோள் எங்கே? மாலைதவழ் மார்பெங்கே? வண்குமுத மலர் என்ன மலர்ந்த செவ்வாய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/455&oldid=912980" இலிருந்து மீள்விக்கப்பட்டது