பக்கம்:வீரபாண்டியம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வீர பாண்டியம். முருகக்கடவுள் துதி. 3. நீர்க்கடல் சுலாவிய கிலத்து கின்மலன் பாற்கடல் அருளினன் பாலனுக் கென்பர் குர்க்கடல் குடித்தவேற் சோதி வானவன் நார்க்கடல் கொடுத்த்ெனை நாளும் ஆளுமே. -- (க) இ-ள் பாலன் என்றது உபமன்யு முனிவரை. அவர் பசுங்குழவியாய்ப் பசித்தழுதபொழுது பரமன் அருள்கூர்ந்து அவர்க்குப் பாலாழி பீங்கா ராதலால் அவ்வள்ளன்மையை உள்ளி இது கூறியதென்க. " பா அக்குப் பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் ' எனத் திருப் பல்லாண்டு கூறுவதும் காண்க. சூர்=சூரபன்மன். கடல் என்றது அளவிடலரிய பலமுடையன யார்க்கும் அச்சம் விளேத்து உச்ச கிலேயில் ஒக்கியிருக்க அவனது உறுதி நிலை கருதி. குடித்தவேல் என்றது விடுத்த வுடனே ரேறச்சுவற்றிய வடவைபோல் சூசாதி அசுரர&னவரையும் வேற மாய்த்த அதன் விறல்கிலே நோக்கி, கார்=அன்பு, பரமன் பண்டொரு பாலனுக்குப் பால் அருளினர்; முருகன் இன்று இந்நூலனுக்கு அன்பு அருளினர் என்றவாறு. பால் உடலை வளர்த்து உணர்வளிக்கும்; அன்பு, உயிரை உயர்த்தி உயர்கதி யுய்க்கும் என்க. சரசுவதி துதி. 4. பூமிசை யமர்ந்தருள் போதன் செவ்விய நாமிசை யமர்ந் தருள் நளின நாயகி கோமிசை யாவகை சுரந்து பொங்குமென் பாமிசை யமர்ந்தருள் பாலித் தாளுமே. (#) இ-ள் போதன்=பிரமா. நளினம்=தாமரை. நளின நாயகி என்றது வெண்டாமரையில் வீற்றிருந்து அண்டர் முதல் யாவருக்கும் அறிவுத் தெய்வமாய் நிலவி கிற்கும் தலைமை கருதி. தோம்=குற்றம். இசையா வகை=குற்றம் யாதும் இல்லாதவாறு என்றதல்ை குணநலங்கள் யாவும் குலவி யுள்ளன என்பது புலம்ை. யாதொரு வழுவுமின்றி விழுமிய கிலேயில் அழகிய கவிகள் விரைந்து விளைந்து வந்த கிலே சுங்துபொங்கும் என்ற கல்ை அறியலாம். கல்விச் செல்வியாகிய சவ வதி தேவி அருள் சுரங்து என்னே ஆதரித்து ஆளுதலால் பொருள் பொதிந்த இந்நூல் புனித கிலேயில் பொலிந்து இனி தெழுந்த தென்றவாறு. பாலித்து ஆளும் என்ற கல்ை ஊழியும் இது ஒளி செய்து மீளும் என்பது பெற்ரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/49&oldid=913018" இலிருந்து மீள்விக்கப்பட்டது