பக்கம்:வீரபாண்டியம்.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அரண் ஆற்றிய படலம் 447 2385 அரணின் அளவு. ஆறடி அகலம் நீளம் ஆயிரம்ஆக மேலே ஏறிய உயரம் காலா றென்னவே மதில்எழுப்பிக் கூறிய முறையே நான்கு திசையிலும் குலவச் செய்தார் வீறுடன் தோன்றிக் கோட்டை விறலுடன் விளங்கிற்றன்றுே. 2386 ஊமைத்துரை உவந்தது. வென்றிசேர் இராமன் சொல்ல விரைந்து வானரங்கள் அன்று சென்றுயர் சேது கட்டிச் சேர்ந்துவங் தனபோல் இன்று கின்றுயர் கோட்டை கட்டி நெஞ்சுவந் துரிமை யாக ஒன்றிய பேரை யெல்லாம் ஊமைகண்டு உவந்து நின்ருன். (13) 2387 உலகம் புகழ்ந்தது. மன்னன்பால் குடிகள் கொண்டு வாய்ந்துள அன்பும் மாண்பும் அன்னவன் திறலும் செல்வாக் கமைதியும் பிறவும் காட்டி மன்னிமுன் கோட்டை நிற்கும் மாட்சியைக் கண்டோர் எல்லாம் இன்னபேர் அரசன் அன்ருே இரும்புவிக் குரியன் என்ருர். (14) 2388 குடி ஏற்றியது. குலங்கர் அகன்று கொல்லம் பரும்பினில் குடிபோ யுள்ள தலைவியர் முதலோர் தம்மைத் தகவுடன் அழைத்து முன்னம் 12 வெள்ளையரால் த ட் டி த் தரைமட்டமாய்த் தகர்ந்து கிடந்த கோட்டையை மீண்டும் விரைந்து கட்டி யாரும் வியந்து நோக்க வீர வேகமாய்ப் பாஞ்சையர் நின்றுள்ளனர். அந்த உண்மை ைப ஈண்டு உணர்ந்து கொள்கின்ருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/494&oldid=913023" இலிருந்து மீள்விக்கப்பட்டது