பக்கம்:வீரபாண்டியம்.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. தளபதியைத் தளையிட்ட படலம் 495 அழுது தொழுதது. 2608 வந்து வேங்தை வணங்கியென் மங்கலம் தந்து தண்ணருள் செய்! எனத் தாழ்ந்தவள் எங்தை யே! என ஏங்கி அழுதனள் மைந்தன் நோக்கி மனமுள் உருகினன். (31} கண்டு இரங்கியது. 2609 தமிழ றிந்திலள். ஆயினும் தன்மொழி அமிழ்தம் என்ன மிழற்றி அழுதுகண் குமிழி யோடக் குழைந்தவள் கின்றதைக் கமழும் கண்ணியன் கண்டுகண் ைேடினன். (32) கருணை புரிந்தது. 26.10 அந்த ஆங்கில மாதை அமைதியாய் இந்த மன்னன் இதமுடன் நோக்கியே முந்தொ ராசனம் தங்திரு என்று பின் சிங்தை யுன்னிச் செயல்முறை செய்தனன். (33) 261 1 சிறை நீக்கியது சிறையிருந்த துரைமகனேச் சீக்கிரம்போய்க் கொணர் மின் ! என இறைமகன் முன் உரைசெய்ய எழுந்திருவர் விரைந்துபோய் முறைமையுடன் கொண்டுவந்து முன் விடுத்தார்; அன்னவனைப் பொறைமையுடன் அவள்கையில் பொருங்த அளித் தருள் புரிந்தான். (34) 2612 கவர்ந்து வந்த பொருளை அருளியது. அருமருந்தும் கைவெடியும் கடுங்கொடிய படைக் கலன்கள் அருமருந்து போன்றமணி அணிபிறவும் அவற்கருளி பெருவிருந்தொன் றினிதாற்றிப் பெண்ணவளுக் குரிமையா ஒருபெரிய பட்டாடை உவந்தரசன் உதவினன். (35)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/542&oldid=913077" இலிருந்து மீள்விக்கப்பட்டது