பக்கம்:வீரபாண்டியம்.pdf/543

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 - வி ர பாண் டி ய ம் 26 13 ஊர்தியில் உய்த்தது. பெட்டி வண்டி ஒன்றருளிப் பேரன்போ டவ்விருவர் ஒட்டியதில் ஏறியிருந்து ஊர்போக உவந்தளித்தான்: எட்டிவழி யிடையேதும் இடையூறு நேராமல் கட்டிஅயல் செல்ல இரு காவலரைக் காட்டியுய்த்தான்.() 26.14. உள்ளம் உவந்தது. மன்னவன்றன் செயல்முறையும் மனநிலையும்மதிநலமும் இன்னபெரும் பகைக்காலத் திகல்இனத்தைச் சேர்ந்த -- வன் என்று அன்னவகை யாதொன்றும் பாராமல் அருள்புரிந்தது என்னபெருந் தகைமை என எண்ணியிருவரும் வியத் தார். (37) 26.15 உவந்து மொழிந்தது. தாயும்நீ தந்தையும்நீ தன்னருமைக் கொழுநனேநேர் ஈயுமந்த இசைவில்ை இன்மாமி மாமனும் நீ ஆயுமுன்றன் குலமுறையும் அருந்திறலும் அடுத்தவரை ஏயும்அரு ளுடன் காக்கும் இருந்தகவும் இன்றறிந்தேன். 26 16 விடை பெற்ற கன்றது. நன்றறிந்த குலமகனே! நல்கும் விடை எனவுரைத்து நின்றுதொழு தவளுவந்து நேர்ந்ததுணே போடகன்ருள்: சென்று திரு மந்திரம்போய் சேர்ந்தவுடன் பெற்ருேருக்கு ஒன்றியிங்கு நிகழ்ந்ததனே ஒருகடிதத் துறவிடுத்தாள்.() 26 17 பெற்ருேர் உவந்தது. அன்ன திரு முகமடைய அவருண்மை அறிந்தவுடன் இன்னலொடு மகிழ்வெய்தி இம்மன்னன் பெருந்தகவும் நன்னருயர் மனு முறையும் நயந்துபுகழ்ந்தொருமுடங்கல் பன்னரிய படிபுகழ்ந்து பரிசொன்ருே டுடனுய்த்தார்(40) 26.18 சீமையின் பரிசு சிமையுறு பெற்றேர்கள் சீர்மையுடன் தன் மகட்குச் சேமமுடன் அனுப்பியவத் திருமுகமும் தெளிபரிசும் நேமமுடன் வரக்கண்டு நெடிதுவந்தப் பரிசைநேர் ஊமைமனுக் குவந்தனுப்பி உபசாரம்புரிந்திருந்தாள்.(சி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/543&oldid=913078" இலிருந்து மீள்விக்கப்பட்டது