பக்கம்:வீரபாண்டியம்.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ரு ப த் தே ழா வ து சேனைகள் சேர்ந்த படலம் பாஞ்சைக் கோட்டையைப் பிடித்தற்கு வலியுடைய பெரிய படைகள் வேண்டும் என்று சேனைத்தலைவன் கும்பினி அதிபதிகளுக்கு எழுதிவிட்டான் விடவே சேனைகள் பல வழிகளிலுமிருந்து திரண்டு வந்தன. கயத்தாறு என்னும் _ளர் அயலே பாசறை செய்து தங்கின. குதிரைப் படை களோடு ஆங்கிலேயர் பலர் அதில் தளபதிகளாய் அமர்ந் திருந்தனர். நாற்பது நாள் வரையும் நான்கு பக்கங்களிலு மிருந்து படைகள் வந்து சேர்ந்துகொண்டிருந்தன. முடிவில் தலைமைத் தளபதி மக்காளி (Macatilay) படைகளே எழுப்பி வந்தார்; வருங்கால் வழிஇடையே குதிரைக்குளம் என்னும் மயர் அயலே பாஞ்சை வீரர் எதிர்த்தனர்; இருதிறத்திலும் இடர்கள் நேர்ந்தன. அந்த இகல் க ட ந் து அன்று பசுவந்தனை என்னும் ஊரையடைந்து ஆங்கிலப் படைகள் தங்கியிருந்தன. மறுநாள் மார்ச்சு மாதம் 31ந் தேதி (8 | –8–180 1 ) பாஞ்சாலங்குறிச்சியை அடைந்தன. பாசறை சமைத்துப் போருக்கு ஆயத்தமாயின. அந்த நிகழ்ச்சிகளே இந்தப் படலம் விளக்கி யுள்ளது. படைகள் படர்ந்தன. 2640 அடலுறு பாஞ்சையை வெல்ல ஆவலாய் மிடலுயர் சேனைகள் மேவி வந்தன: திடலுறு பாசறை சேர்ந்து கின்றன: கடலென எங்கனும் கலித்தி ருந்தன. ( 1) வெடிகள் விரிந்தன 26.41 சுடுகிற வெடிகளும் சூழ்ந்து கின்றுபோர் இடுகிற பீரங்கி யினங்கள் யாவுமே அடுகொலை செய்திட அடர்ந்த டைந்தன; படுபரித் திரள்களும் படர்ந்து வந்தன. (2) வெள்ளைத் தலைவர்கள். 2642. தள்ளருங் திறலுடன் சமரில் தேர்ந்துள வெள்ளேயர் தலைவராய் விளங்கி மேவினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/548&oldid=913083" இலிருந்து மீள்விக்கப்பட்டது