பக்கம்:வீரபாண்டியம்.pdf/568

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. அடு சமர் ஆற்றிய படலம் 521 -1742 பீரங்கிகள் பிதிர்ந்தன. வெந்திறற் றலைவன் உரைத்திட வெகுண்டு விண்னெடு மண்ணெலாம் நடுங்க முந்திமேல் பதித்த பீரங்கி யனைத்தும் மூட்டிமுன் சுட்டனர்; மூண்டு கொந்துகொங் தாகக் குண்டுகள் வந்து கோட்டைமேல் பாய்ந்தன. குவித்துச் சிந்திய பதராய்ச் சிதறிய நெல்லாய்ச் சிாழிந் தொழிந்தன எல்லாம். (19) -1743 அரணின் அதிசயம். நெடியமா மலைமேல் எறிந்தமண் கட்டி நிலைகுலைந் தழிதல்போல் நேரார் கொடிய பீரங்கிக் குண்டுகள் எல்லாம் கோட்டைமேல் பாய்ந்தொரு துகளும் அடியிலே யுதிர்க்கா தவைகளே யுதிர்ந்தங் கயலெலாம் பரந்துருண் டுழன்ற படியிலே மடிகொள் மடையர் தங் குடிகள் படுபயன் இழந்துபட் டனபோல். (20) 2744. மண் அரண் கண்ணனை ஒத்தது. கல்லினுல் மாரி காத்தகண் ணனைப்போல் கருதலர் இடைவிடா தடலோடு எல்லேயில் லாமல் பொழிதரு தீய ஈயவெங் குண்டுகள் எல்லாம் புல்லிய எரியின் பொறியெனச் சிதறிப் புறத்திடை யொழிந்திடப் பொங்கித் தொல்லெயில் உள்ளே பல்லுயிர் பேணித் தோற்றமுற் றிருந்தது தொடர்ந்தே. (21) ாஞ்சைக்கோட் டை அர ண் கண் ன னைப்போல் எண்ணரிய திறலோடு எதிர்ே நின்று பாஞ்சை வீரர்களைக் காத்தருளி யது. பண்டு பெய்த கல் மாரியை.அவன் தடுத்துக் காத்தான்; அன்று பெய்த குண்டு மாரியை அது தடுத்துக் காத்தது. 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/568&oldid=913105" இலிருந்து மீள்விக்கப்பட்டது