பக்கம்:வீரபாண்டியம்.pdf/582

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. அடு சமர் ஆற்றிய படலம் 535, -- " ", வெள்ளைத் தலைவன் விளம்பியது. கட்டபொம்மன் என்னுமந்தக் கட்டாண்மைத் திறலுடைய க்ாளே பின்னே பட்டம்வந்து கட்டியுள்ள இவ்வூமைப் பாண்டியன்றன் படைமா வீரர் வெட்டியெறிந் தடுபடையை வெஞ்சூறை யாடினர்; விளிய விட்டே எட்டியிவண் அடைந்துள்ளேம்: என்ன பழி! இன்னதென இகழ்ந்து சொன்னன். {72) -, *) () எட்டன் கொட்டியது. அன்னவுரை கேட்டவுடன் எட்டப்பன் அகம் கலங்கி அளவ றிந்தம் மன்னனவன் மனம்தேற்றும் வகைசூழ்ந்து காமெழுந்து வந்த நாள் தான் பின்னமுறு புதன்கிழமை ஆதலினிப் பிழைபட்டுப் பீழை யுற்ருேம்: இன்ன நமக் கினிதாக வெற்றியுண்டாம் ஏங்தல்:என இசைத்து ரைத்தான். {73) - "')," வாளில்ை வந்தது. நாளினுல் வந்தவொரு நவையென்ன நயமாக தயங்து நாடிக் கோளில்ை கொலேமூட்டிக் குடிகெடுக்கும் எட்டப்பன் குறித்துச் சொல்லத் தேளில்ை கொட்டுண்டு துடித்தவன்போல் இருந்த அவன் சிரித்துத் தெவ்வர் வாளினுல் வத்ததன்றி மற்ருென்ருல் இல்லேயென மறுத்த றைந்தான். (749 -1, 0}} இருபடையும் இழிந்தது. உன் படையும் என்படையும் ஒருமுகமா யுருத்தேற்றி உடன்றெதிர்த்தோம்; முன் படையாய் நின்ற பல பீரங்கிக் குண்டுகளே முடுக்கி விட்டோம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/582&oldid=913121" இலிருந்து மீள்விக்கப்பட்டது