பக்கம்:வீரபாண்டியம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாவது நகரநிலைப் படலம். ー幸>*守ー இப் காப்பியத் தலைவனுகிய வீரபாண்டியன் விற்றிருந்து அாகபுரிய Nси பதும், அவன் முன்னுேர் முதலாக முதன் மை எய்தி வந்தது மாகிய பாஞ்சாலங்குறிச்சி என்னும் வீரமா நகரின் தலைமை நிலைமைகள் இதில் கூறப்படுகின்றன. ஆதலால் இது நகர நிலைப்படலம் என நின்றது 70. பூஞ்சோலை வாவி யெங்கும் பொலிதாப் புடைசூழ் கெங்கும் காஞ்சால வளங்கள் நல்கும் காற்றிளங் கமுகும் ஓங்கத் ஞ்ேசாலி வாழை தேமா செழித்தொளி தழைத்து நிற்கும் பாஞ்சாலங் குறிச்சி என்னும் பதியொன்று சிறந்ததுண்டே.(க) 77. நீர்வளம் மலிந்து சூழ கிலவளம் பொலிந்து நீளச் சீர்வளம் கிறைந்து தெய்வத் திருவளஞ் சிறந்து நாளும் s ார்வளம் பொருந்தி பின்பம் I யந்திடச் செங்கோல் ஏந்திப் போர்வளம் திருந்தி விரப் புகழ்வளர்க் கிருந்த தன்றே. (e.) கலிநிலைத்துறை. 78. தென்றி ருத்தமிழ் நாடெனத் திகழ்ந்தொளி சிறந்து பொன்றி ருத்திய பொருநைன் னதியொடு பொலிந்து மன்றி ருத்திய நலனெடு பலவள மலிந்து நன்றி ருத்திய பாண்டிநாட் டிடையதந் நகரே. (A) 79. நெல்லை மண்டலத் துள்ளது நெடும்புகழ்க் கெல்லாம் எல்லை யாயது திருமகிழ்ங் திருப்பதாய் எங்கும் இல்லை யிச்செல்வம் எழில்நலம் கலைகிலே என்னும் சொல்லை மேயது சுரபதி யனையதப் பதியே. (ச) 80. பொன்னின் மாமகள் புகழ்மகள் கலைமகள் போரில் மன்னி வாழ்மகள் மகிமகள் சயமகள் கலையூர் கன்னி மாமகள் காமரு மகள்களித் திருக்கும் இன்ன மாநகர்த் திருவினை என்னவா அரைப்பாம். (டு) ங் - தனலட்சுமி, கீர்த்திலட்சுமி, வித்தியாலட்சுமி, செளரியலட்சுமி, தைரியலட்சுமி, விசயலட்சுமி, வீாலட்சுமி, இராசலட்சுமி ஆகிய அட்ட லட்சுமிகளும் அமர்ந்துள்ளமையை முறையே இதில் அறிந்துகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/62&oldid=913188" இலிருந்து மீள்விக்கப்பட்டது