பக்கம்:வீரபாண்டியம்.pdf/629

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582 == 3O3O 3©3 Ꭵ 3C 32 ՅO ՅՅ வி ர ப ா ண் டி ய ம் பகை பகை என்று கூவினர். பகை பகை என்றுவாய் பதறிக் கூவியே புகையுறக் கைவெடி பொருந்தச் சுட்டனர்; தொகையுறு படையெலாம் துணுக்க முற்றுடன் வகைதெரி யாமலே மறுகி மண்டின. (143) மருண்டு மூண்டனர். எதிரிகள் புகுந்தனர் என்றுள் எண்ணியே முதிர்சின முடன் மிக மூண்டு நேர்ந்தவர் பிதிர்வுறக் கொன்றனர் பிழைக ளாகவே அதிர்வுடன் அவரவர் அடித்து மாண்டனர். (144) மாறிச் சுட்டனர். உள்ளுற கின்றிவர் ஒன்ன லார்தலே துள்ளிட வெட்டினர்; தொடுத்துச் சுட்டனர்; கள்ளமென் றறிகிலார் கைக லந்தனர்; தள்ளரும் படையொடு படைகள் தாக்கின. (145) இறந்து பட்டனர். துக்கத்தின் தொடர்ச்சியால் தொடர்பு கண்டிலர்: ஊக்கத்திண் டிறலினர் உணர்வு குன்றினர்; கோக்கத்திற் பட்டவர் நொந்து கீழ்விழ ஏக்கத்திற் சுட்டனர் இறந்து பட்டனர். (146). எங்கும் திகில். 3034 கொல்லுகொல் என்றசொல் எங்கும் கூறியே <PO35 வெல்லுவெல் என்றுவாள் விசிச் சென்றனர்; அல்லிலன் றெங்கணும் அவல மீறியே எல்லேயில் முண்டங்கள் எழுந்து துள்ளின. அனந்தலோடு அழிந்தனர். இனங்தெரி யாமலே எதிரி யென்றவர் சின்தெறி வேலினல் தீய குண்டினுல் மனங்தெரி நட்பினர் மாறு மாறுகொண் டனங்தலோ டடர்ந்தனர் அழிந்தொ ழிந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/629&oldid=913208" இலிருந்து மீள்விக்கப்பட்டது