பக்கம்:வீரபாண்டியம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது குலமரபுப் படலம். இக் கதா நாயக னுடைய குலத்தையும் மாபையும் உணர்த்தலால் இது குல மரபு என நின்றது. குலம்=சாதி. மாபு=வமிசம், இனம். 113. 114. 116. 117. 118. இந்த மாநகர் இருந்தா சாண்ட அவ் அரசன் எந்த மாமா பினனவன் இனமெதெங் கிருந்து வந்த தம்மா பெனவிவை அனைவரும் அறிய முந்த ஒதிமேல் உள்ளன முறைமுறை மொழிவாம். (க) மரபின் இயல்பு கம்ப ளங்களுள் தோக்கல வாரெனுங் குலத்தார்; இம்பர் நாடெங்கும் இரும்புகழ் படைத்தகற் றிறத்தார்; உம்பர் கோனேயும் ஒளிர்முடி யுடைத்துமுன் னெழுந்த தம்பி ரானையே தம்பிரான் எனக் கொளுத் தாத்தார். (e–) தெலுங்கு நாட்டிடை யிருந்திவண் வந்தவர்; தெலுங்கே இலங்கு தாய்மொழி யாய்வழங் கியல்பினர்; என்றும் கலங்கு முதகெஞ் சுறுதியர்; அமாையே கருதித் தலங்க டோறுத்தங் திறலினே கிறுவுறுஞ் சதுரர். (н.) பொய்யும் வஞ்சமு மறந்தும்வாய் நெஞ்சிடைப் பொருந்தார்; மெய்யும் விசமும் மானமும் பேணியே வாழ்வார்; எய்யும் வில்கணே வாள்.ஒளி வேல்களே என்றும் கையும் மெய்யுமாய்க் கவினுறக் கொண்டுளங் களிப்பார். (ச) உழைத்து வாழ்வதை ஒருபொரு ளாகவுட் கொள்ளார்; தழைத்த செல்வமும் தாணியும் வெண்டுமென் றெண்ணுர்; இழைத்த போரிவண் உண்டென வந்தெவ ாேனும் அழைத்த போதுளங் களித்தெழுந் தார்த்துமேல் வருவார்.(டு) போர்பெ ருதநாள் புல்லிய நாளெனப் புலந்து கார்பெருதபைங் கூழெனக் கரிந்துளம் கவல்வார் பார்பொருதவெம் படைவந்த தென்னினும் பயந்து நேர்பொாதக லாரெதிர் ஏறிமுன் கிம்பார். (சு) - _ --- 2. தம்பிரான் என்றது முருகக்கடவுளே. உக்கிரகுமார பாண்டியனுய் அவதரித்து இந்திர னே மகுடபங்கஞ் செய்த அவ் அருள் வீரனேயே தம் குலதேவதையாக் கொண்டுள்ளவர் என்பதாம். பிரான்=கடவுள், தலைவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/71&oldid=913381" இலிருந்து மீள்விக்கப்பட்டது