பக்கம்:வீரபாண்டியம்.pdf/717

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570 வி ர ப ா ண் டி ய ம் கோட்டை உடைந்த பின் ஊமைத்துரையோடு தொடர்ந்து வெளி ஏறினவர்களுள் ஆயிரத்தறு பேர் மாண்டு போயினர். அவருள் சிவசங்கு என்பவன் ஒருவன்; மறவர் மரபினன். சிறந்த போர்வீரன்: உயிர் ஊசலாடிக் கிடந்தான்; அவனேப் பெற்றதாயான முத்தம்மாள் என்பவள் இரவு பத்து மணிக்குப் பிணங்கள் குவிந்து கிடந்த இடத்துக்கு வந்தாள்: தன் மகனைத் தேடினுள்; உதிரச் சேற்றிடையே கண்டாள்; அள்ளி எடுத்தாள்; அலறி அழுதாள்; அந்த அன்னையை நோக்கி அவ்விர மகன் பரிவோடு சொன்ன விழுமிய உரைகளை அயல்ே காண வருகிருேம்.

  • வீரமகன் விளம்பியது. 3458 அன்னையே! என்னே எண்ணல், அங்கதோ கிடக்கும் நந்தம் மன்னனைப் பாது காத்து

மனையிடைக் கொடுபோய் ஆற்றி இன்னுயிர்க்கு இனிமை செய்க! என்னுயிர்க் கிரங்கல்! என்று தன்னுயிர் நீத்தான் அந்தோ! தாயும்அத் தகவே செய்தாள். (IOI) 3459 மரண வேதனையிலும் அன்பு. கரணம்யா வையும் கலங்கிக் கடுந்துயர் அடையா நின்ற மரணவே தனையி லும்தன் மன்னன்பால் மனம் செலுத்தி இரணங்கள் ஆற்று கென்ன இரந்துயிர்இறந்த அந்த இரணவீ ரன்றன் அன்பை எங்ங்னம் புகழ்வேன் அம்மா! 3460 தாயும் சேயும் பெற்றதாய் மகன் இறந்த பெருந்துயர் உயிரைவாட்ட உற்றஒண் கண்ணிர் ஆருய் ஒடவுள் உருகி நின்ற மற்றவள் அந்தச் சேயின் வாய்மொழிப் படியே நாடி வெற்றிவேல் வேந்தன் பக்கல் விரைந்தனள் விழைந்து - (வங்தாள். -

  • இந்த வீரமகனுடைய நீர்மை சீர்மைகளே நினைந்து உணர்பவர் எவரும் நெஞ்சம் கரைந்து உருகி மறுகுவர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/717&oldid=913396" இலிருந்து மீள்விக்கப்பட்டது