பக்கம்:வீரபாண்டியம்.pdf/721

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

674 வி ர பாண் டி ய ம் 34.76 வீரலட்சுமி வென்றது. இன்னவாறு அனேவோரும் இறந்துபடும் காலத்தே மன்னவன்றன் மாமன்மகள் மாவீர லட்சுமி முன் தன்னுயிரை மாய்க்க எண்ணித் தான் எழுங்தாள் (அவ்வமயம் ஒன்னலர் உள் ஏறிவரும் உறுதியைக் கண்டுளம் வெகு (ண்ைடாள். 3477 பகைவனைக் கொன்றுபட்டது. அழகொழுகு திருமுகத்து அவ் ஆரணங்கு தன்னுயிரை விழைவாக விடுமுன்னே வேல்ஒன்றை விரைந்து எடுத்து (அங்கு உழைபூர்ந்து கின்றஒரு ஒன்னலனே உயிர்மாப்த்தே இழையோடும் இடைதுடங்க எதிர்வாவி இடைமாய்ங் (தான். 3.478 வீர மரணம். அடலோடு மனம்களித்தங்கு ஆண்மையுடன் அடைந்த (அவன் குடலோடு மண்வீழ்ந்து குலேந்தாவி தீர்ந்து ஒழிந்தான்; மிடலோடு நேர் வந்து வென்ற இவள் வேலொடுதன் உடலோட எறிந்துடனே உயிர்துறந்து புகழ்சிறந்தான். 34.79 எவரும் வியந்தது. மண்வீரம் உடையது என மாநிலத்துப் பாஞ்சைநகர் எண்வீர முடையதா யிரும்புகழ்கொண் டிருந்ததிங்தப் பெண் வீரம் நேர்கண்ட பேர் எல்லாம் பெருங்குலத்தின் திண் வீரம் தனேவியங்து திறம்புகழ்ந்து கின்ருர்கள். 3Ꮞ8O சேனைத் தலைவன் திகைத்தது. அவ்வீரக் குலமகளின் அருந்திறலேப் பெரும்படையின் தெவ்விரத் தலைவன் நேர் தெரிந்து அஞ்சி மிகவியத்தான்; இவ்வீரப் பதிமகளிர் இயல்பு இதுவேல், இகல்னழுந்த வெவ்விர மைந்தர் திறம் விளம்பலாம் தகைமையதோ:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/721&oldid=913406" இலிருந்து மீள்விக்கப்பட்டது