பக்கம்:வீரபாண்டியம்.pdf/723

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

676 வீ ர ப ா ண் டி ய ம் யார்வீரர் இவன்போல அருந்திறலோடு அமர்ந்திந்தப் பேர்வீரம் கொண்டுகின்ருர் பேருலகில் எனப்புகழ்ந் (தான். 34.87 பார்த்து உவந்தனர். புறநகரம் கண்டுகின்று போர்மன்னர் வீற்றிருந்த திறநகரம் இனிதடைந்தான் செழுமணி மாடங்களுடன் அறமிருந்து குடிகொண்ட அரண்மனையும் பார்த்துவந்து பெறலரிய பேறு என்று பெருமகிழ்ச்சி மீக்கூர்ந்தான். 3488 அஞ்சாதான் அஞ்சியது. உள்வியந்து நின்ற அவன் உள்புகுந்து நோக்கினுன் கள் விரிந்த மலர்க் கூந்தல் காரிகையார் வீரியமாய் ஒள் எரியில் வீழ்ந்து இறந்த ஊறுகண்டு நெஞ்சுருகி அள்ளுபழி என்று அயர்ந்தான் அஞ்சாதான் அஞ்சி நொந்தான். 3.489 இரங்காதான் இரங்கியது நின்றினிமேல் இரங்குவதால் நேர்டயன் ஒன்று இல்லை.எனத் துன்றிய அவ் வுடல்கள் எலாம் துரிசறவே கடிது அகற்றி நன்றியொடு சங்கமன்னர் நற்பெயரால் தான்கொண்ட வென்றியுறு கொடிகாட்டி வீற்றிருந்தான் விறலுடனே. 34.90 ஐரோப்பியர் இனி ஆள்வார். போராளர் பலர் திரண்டு பொங்குகடல் போல்வந்த பேராளர் உயிரைஎல்லாம் பேணியுண்ட பாஞ்சைதனை நேராள நின்றின்று நேர்ந்துகொண்டேன் எமர் இனிமேல் பாராள்வார் பயமின்றிப் படியுயர்வார் எனப்பகர்ந்தான். 3491 கும்பினிக்கு அறிவித்தது. பாஞ்சைநகர் பிடிபட்ட பான்மைதனே மேலோர்க்கு வாஞ்சையுடன் எழுதிவிட்டு மன்னவனைப் பிடியாமல் ஆஞ்செயலே அறியாம லமர்ந்திருத்தல் தகாதுஎனப்பின் போஞ்செயலே நாடி எட்டன் பொருதலேவன் பால் உரைத் (தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/723&oldid=913410" இலிருந்து மீள்விக்கப்பட்டது