பக்கம்:வீரபாண்டியம்.pdf/737

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

690 3565 356? 3568 3569 357 Ο வி ர ப ா ண் டி ய ம் போர் மூண்டது. மூண்டெழு படைகளே முதன்மை யாகவே ஈண்டிய தலைவர்கள் இயக்கிச் சென்றனர்: ஆண்டகை ஊமையை அல்லில் சூழ்ந்தனர் நீண்டவெம் போரவண் கெடிது தேர்ந்ததே. (208) ஊமைமன் துணிந்தான். மாற்றலர் படைவந்து வ8ளங்து நின்றுன. ஊற்றமும் உறுதியும் ஊக்கி வெங்கொலே ஆற்றவே துணிந்துளர் அழிந்து போகுமுன் ஏற்றதை இயற்றுவம் எனத் துணிந்தனன். கடுங்க வீசினன். ஊழிவெங் தீஎன ஊக்கி ஊமைமன் பாழியங் தோள் வலி பலரும் கண்டிடக் காழிமை யோடுகைக் கொண்ட வாளினுல் நாழிகை ஒன்றினில் நடுங்க வீசினன். (210) காடி ஏறிஞன். வீசிய வேல்களே வேறு செய்துமேல் மூசிய படைகளே முறுக்கி முண்டங்கள் ஒசைகொண் டுருண்டிட உருட்டி உள்ளுற நாசங்கள் செய்தனன் நாடி ஏறிஞன். (2:1) கண்டங்கள் கண்டான். மண்டிமேல் வருந்தொறும் மாண்டு மண்ணுற முண்டங்கள் விழுந்தன: முடிந்து துள்ளின: துண்டங்கள் எங்கணும் தொடர்ந்து ருண்டன: கண்டங்கள் கண்டனன்: கணக்கொன் றின்றி.ே மறைந்து போயினன். அல்லிடை நடந்த அப் போரில் தப்பியே வல்லியம் என இவன் மறைந்து போயினுன்: கொல்லியல் வெறியொடு கூடி வந்தவர் வெல்லியல் வலியுடன் விரைந்து பாய்ந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/737&oldid=913440" இலிருந்து மீள்விக்கப்பட்டது