பக்கம்:வீரபாண்டியம்.pdf/740

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் 693. J582 கண்டவர் கதறினர். கண்டவர்கள் எல்லாரும் கதறி அழுது எங்கியிந்த மண்டலத்தை ஆண்டுவந்த மன்னவர்க்கா இம்முடிவு: பண்டைவினேப் பயனிதுவோ? பழிசாவும் அழிதுயரும் மண்டியெழப் பரிவுகொண்டே மறுகிகின்ருர் யாவருமே. 3583 பகைவரும் பரிந்தார். பொல்லாத பகைவராய்ப் பொங்கிநின்ற வெள்ளேயரும் வல்லாளன் இவண்மாண்ட வகைதெரிந்து மிகவியந்தார்; வெல்லாமல் போனலும் வென்றவனப் விறல்மிகுந்தே நில்லாமல் நீங்கியுளான் கிலேயான புகழுடனே. (228) 3584 வீரமுடன் மாண்டான். தென்னுட்டுச் சிங்கம் எனத் திசைஎங்கும் இசைஓங்க முன் ட்ைடி நின்றவருள் மூத்தவனே முன்மாண்டான்: தன்ட்ைடம் சிறிதேனும் தளராமல் தம்பிஇன்று மன்ட்ைடு வீரமுடன் மாண்டுள்ளான் எனப் புகழ்ந்தார். 3585 காட்டு மக்கள் அழுதனர். காட்டுமக்கள் எல்லாரும் நாடாண்டு நாளுமே நீட்டுபுக ழுடன் வாழ்ந்த கெடியகுடி படுகேடாப்க் கூட்டுவழி அயல்நாட்டுக் கும்பினியால் குலைந்ததென ஏட்டுவழி அடங்காத எழுதுயரால் அழுதயர்ந்தார். 3586 பகைவர் பழி ஏறி கின்ருர். போர் ஏறிப் பொருதுநின்ற புலம்.எங்கும் மாளாமல் சீரேறி வென்றுவந்த திறல்வீரக் குலமகனே நாரேறிப் பேணுமல் நவைஏறிக் கொன்றதனுல் பாரேறி நீளுகின்ற பழியேறி நின்றுள்ளார். (229), 3587 வெள்ளையர் விரகு. வெள்ளேயரை எதிர்த்தவர்கள் வெந்துயரம்மிகவடைந்து துள்ளிமடிங் தழிவரெனும் துணிவதனேக் காண்மின் எனக் கள்ளமற யாவருமே கண்டடங்கி நின்றுவரத் தள்ளரிய தந்திரத்தைத் தந்திரமாய்ச் செய்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/740&oldid=913448" இலிருந்து மீள்விக்கப்பட்டது