பக்கம்:வீரபாண்டியம்.pdf/751

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப் பத் தி ரண் டா வ து கதி எய்திய படலம். பாஞ்சைக்கோட்டை மேல் படைஎடுத்து வந்த ஆங் கிலேயர்களே எதிர்த்து அதிசய வீருேடு ஊமைத்துரை போராடி வந்தார். பலமுறையும் வென்றர். வென்றும் முடிவில் பகைவர் படுமோசமாய்ப் புரிந்த கொடிய சதி வ ஞ் ச னே யா ல் கோட்டையைவிட்டு வெளி ஏறினர். சிவகங்கைச் சிற்றரசனகிய மருதுபாண்டியனே மருவிப் பொருபடை திரட்டி மீண்டும் போருக்கு மூண்டு நின்ருர். நீண்ட ஆங்கிலப் படைகள் கெடிது மூண்டு வந்து கடிது போராடின. அப்போரில் இருதிறத்திலும் பலர் மாண்ட னர். இறுதியில் தனது அருமைத் தம்பி முதலாகப் பல துனேவர்களே இழந்துவிட்டமையால் உள்ளம் வெறுத்து உலகைத் துறந்து வடதிசை நோக்கி நடந்தார்: காசியை அடைந்தார். விசுவநாதரைத் தெரிசித்துச் சி ல | ர ன் அங்கே தங்கியிருந்தார். பின்பு இமயமலையை அடைந் தார். அரிய துறவிகளும் பெரிய முனிவர்களும் யோக சித்தர்களும் உலகப்பற்றுகள் அற்று உண்மைப் பொரு ளேயே கருதி ஆன்ம சிந்தனே யாளராப் அமர்ந்திருப்ப தைக் கண்டார்; உள்ளம் தெளிந்தார். உறுதி உண்மை களே உணர்ந்தார். உற்ற கவலைகளே எல்லாம் மறந்தார். பரம்பொருளேயே சிங் தி த் து ச் சித்த சாந்தி யுற்றுச் சிவபதம் பெற்ருர். அந்த அரிய கிலேமை நீர்மைகளே எல்லாம் இந்தப் பகுதியில் தலைமையாய்க் காண வருகிருேம். யாவும் கருதி உணர்ந்து தெளிய வுரியன. சிறுமலை புற்றது. 3625 திரும யத்தினில் தெவ்வர்கள் சேர்ந்துடன் பொரும யக்கினில் பொங்கி அடரஅப் பெரும யக்கில் பிழைத்துப் பிழையிலா ஒரும யக்கில் சிறுமலே உற்றனன். (I).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/751&oldid=913472" இலிருந்து மீள்விக்கப்பட்டது