பக்கம்:வீரபாண்டியம்.pdf/755

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

708 வி ர ப ா ண் டி ய ம் உன்னி உசாவினன். 3645 நின்ற வன்தனே நோக்கிநீ எவ்வகை இன்று வந்திவண் எய்தினை என்றுளம் ஒன்றும் அன்போடு உவந்துகொண் டோரிடம் நன்று தங்கி நலங்கள் உசாவினன். (20) உற்றதை உரைத்தான். 3646 உற்ற செய்தி உரைக்கநேர் அஞ்சியே மற்றவன் மனம் கொந்து மறுகினன்: கொற்ற வன்கிலே கூறுக கூறென முற்ற மைந்து மொழிந்திட லாயினன். (21) 3647 உளங்லை குலைந்தான். வெய்ய போரினில் வீரவெஞ் சேனேயை அழித்துச் செய்ய தம்பியைத் தீக்கொடுந் துரக்கினில் இட்டே ஐயகோ அவர் கொன்றனர் என்றவன் அழுதான்: ஐயன் அங்கது கேட்டதும் அகம்நிலை குலங்தான். (22} 3648 துடித்துப் பதைத்தான். தம்பி மாண்டனன் எனுமொழி செவியினில் விழுமுன் வெம்பு கண்ணினிர் விரிநிலம் விழுந்தது; விழுந்து தும்பி பட்டவெங் துடிப்பெனத் துடித்தவன் பதைத்தான் கம்பி பட்டதை நாவில்ை நவில்வதிங் கெவனுே? (23A 36.49 கருதி அயர்ந்தான். துடித்து கின்றவன் துணிந்துபோய்ப் பகைவரை இன்னே முடித்தும் என்றெழும் முடிவினில் முடிந்ததை முன்னும் மடித்து வாயிதழ் கடித்திடும் மருவிய பழியை அடுத்த டுத்தகத் தழல்எழக் கருதிகின்று அயரும். (24) 365 O ஆவலித்து அழுதான். தெண்டி ரைப்பெருங் கடல்எனத் தெவ்வர்கள் திரண்டு. மண்டி நின்று அமர் புரியினும் மறலிவந்து உயிரை உண்டு போவல் என்று உருப்பினும் உளம்கலங் காத திண்டி றற்பெருஞ் சேவகன் ஆவலித்து அழுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/755&oldid=913479" இலிருந்து மீள்விக்கப்பட்டது