பக்கம்:வீரபாண்டியம்.pdf/759

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 12 வி ர பாண் டி ய ம் 3663 உற்றவன் உளைந்தது. முன்னவனே முதலிழந்தேன் மூண்டுதொடர்ந்துடனிருந்த பின்னவனே இன்றிழந்து பெரும்பாவி யாகி நின்றேன்: இன்னமிங்த உலகதனில் இருப்பதினும் இறப்பதுவே நன்னரெனத் துணிந்தெழுந்தான் நண்ணினவன் நடுங்கி (நின்ருன். 3664 ஊக்கித் தடுத்தது. எழுந்தவனே விர்ைந்துதொழு திடைதழுவி உடைவாளே அழுந்துறத் தன்கை அனேத்துஎம்.அண்ணலே அவலமிது தொழுந்தகைய கோமகனே! சூழ்ந்தருள் என் ருர்ந்தழு (தான் ஒழிந்தவனும் துணிந்ததனே ஒருமுகமா யுள்ளுணர்ந் (தான். 36.65 உண்மையை ஒர்ந்தது. வடிவாளால் என் தலையை வன்தரையில் விழவுருட்டி மடிவேனே ஆமாகில் மானிலத்தோர் ஏசுவரே. படியாக இவ்வுடலேப் படைத்தபிரான் பணித்துளநாள் முடிவாகு மேயன்றி முடிவிடையில் மூளாதே. (40). 36.66 உணர்ந்து கின்றது. புல்லாதி யாயிழிந்த புன்பிறப்பில் புல்லாமல் வல்லாண்மையாலுயர்ந்த மன்குலத்தில் வந்துதித்தேன் எல்லாரும் தொழுதேத்த இருந்தரசு புரிந்துகின்றேன்: அல்லாரும் பழிவழியில் அழிந்தொழிதல் அழகன்றே. 3.667 கிலையினை இகழ்ந்தது. பற்றலரைப் பாடழித்துப் படுகளத்தில் பாடெய்தி வெற்றி மிகப் பெற்றதெல்லாம் வீணுகி விளிந்தனவே உற்றகொடும் போர்களிலே உயிர்ஒழிந்து போகாமல் இற்றிந்த நிலையிருத்தல் இழிவிழிவே என இகழ்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/759&oldid=913487" இலிருந்து மீள்விக்கப்பட்டது