பக்கம்:வீரபாண்டியம்.pdf/761

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71.4 வி ர ப ா ண் டி ய ம் 367 3 விலகிச் செல்க. போயகல்க! என்றரசன் புகன்றவுடன் பொம்மனவன் நேயமுடன் நின்று அழுது நேர்ந்துநான் உடன்வருவேன் ஆயபணி புரிய அயல் யாரும் இல்லை ஆதலினல் மேயன&ன விலக்கற்க மெய்த்தவனே! எனத்தொழுதான் 3674. பற்று அற்றேன். தொழுதவனே முகம்நோக்கித் துரைமகனும் உளம்மறுகி அழுதயால்! எனக்குஎன்றும் ஆறுமுகம் துனேயுண்டு: முழுவதுமே துறந்துள்ளேன் மூண்டுநீ தொடர்ந்துவரின் , பழுதாகும் பற்றினிமேல் பழியாகும் எனப்பகர்ந்தான். 36.75 வந்தவன் போனன். மன்னனுளம் துணிந்துளதை மற்றவனும் நன்குனர்ந்து. பன்னியினி உரையாடல் பயனில்லே எனத்தெளிந்து துன்னியபே ரன்போடு தொழுதழுது விடைபெற்றுத் தன்னுடைய ஊர்நோக்கித் தனியாக அவன்போனுன். 3676 வேடரிடம் விடை பெற்ருன். அவன் அகன்று போனவுடன் அங்குள்ள வேடரிடம் இவன் உவகை மொழியாடி இனியவிடை கொண்டெழுந்து தவமுடையார் தனிவாழும் சாலைகளேத் தொழுது எத்திக் சிவமுடைய காசிநகர்த் திசைநோக்கிச் செலநடந்தான். 3677 காசிப்பதி அடைந்தான். பார்தோறும் பெருங்கீர்த்தி படர்ந்தேறப் புரிந்த அவன் ஊர் தோறும் இடைத்தங்கி உளத்துறவு மீக்கொண்டு யாரோடும் பேசாமல் அகமுகமே கிலேயாகிச் சீரோடு திகழ்காசித் திருப்பதியைச் சென்றடைந்தான். (52): 3678 கங்கை நீர் படிந்தான். திங்கள் பல செலநடந்து திருத்தலத்தைக் கண்டவுடன் பொங்குவகை மீக்கொண்டு புனிதமுறு புண்ணியம்சேர் கங்கைநீர் படிந்தெழுந்து கடவுளடி தொழுதுனத்திச் சங்கையறத்தெளிந்துள்ளம் தனிமையாஅங்கமர்ங்தான். + =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/761&oldid=913493" இலிருந்து மீள்விக்கப்பட்டது