பக்கம்:வீரபாண்டியம்.pdf/764

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. கதி எய்திய படலம் 717 3.688 வந்த வகை உணர்ந்தது. அரும்புமனத் தாசைஎலாம் அறஒழிந்திவ் அகிலமெலாம் துரும்பெனவே துணிந்துயர்ந்த துணிவுடைய ய்ை என்றும் பரம்பொருளைப் பற்றிநின்று பற்றியதன் பற்றறுக்க விரும்பியிவன் வந்திருக்கும் விரகறிந்தான் விறல்முனிவன், 3.689 ஆதரம் புரிந்தது. வேத கன் எனும் பெயருடன் விளங்கிய அங்த மாத வன் இந்த மன்னவன் மனநிலை தெரிந்து போதம் மேவிய பொருள்மொழி அருளுடன் பொழிய ஆத ரம்புரிந் தமர்கஎன்று இருத்தினன் அயலே. (64) 36 90 அருளுரை ஆடின்ை. வினேயம் ஆக அங் கமர்ந்துமெய் ஒடுங்கிமுன் இருந்த இனைய மன்னனே இன்னகை புரிந்து எதிர் நோக்கித் துனிசெயும்பவத் தொடக்கினைத் துணித்திடு மொழிகள் அனேய மாதவன் அருளுடன் ஆடினன் அன்றே. (65) 369 I போதனை புரிந்தது. தனக்கு நல்லன நாடிநீ தத்துவம் விழைந்து மனக்கு நல்லதோர் வழி என வந்திவண் அடைந்தாய்: உனக்கு நல்லதா ஒர்ந்திவண் உரைக்கின்ற உறுதி எனக்கும் யாவர்க்கும் இனியதாம் இயம்புவன் கேண் மோ! 3692 நிலை தெரிந்தது. மலையில் நின்றெழும் அருவிநீர் வளமுற ஒடி அலேயில் வந்தினிது அமர்ந்திடும் அமைதிபோல் எனது தலேயில் நின்றெழும் நீதியும் தரணியில் எவர்க்கும் உலேவில் இன்பமா முன்னகத்து ஒங்குக உயர்ந்தே.(67) 369.3 உரைகளின் சுருக்கம். அன்ன மாமுனி அன்றருள் செய்த அவ் அறங்கள் இன்ன வாம்என யாவையும் எடுத்திவண் இயம்பின் மன்னும் இக்கதை வளர்ந்திடும் ஆதலால் சுருக்கி நன்ன யம்பெற நலமுடன் நவிலுவன் இனிதே: (68),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/764&oldid=913499" இலிருந்து மீள்விக்கப்பட்டது