பக்கம்:வீரபாண்டியம்.pdf/771

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 24 வி ர ப ா ண் டி ய ம் 37.29 பத்தியும் ஞானமும். பத்தி ஞானங்கள் என்றிரு வகையினும் முத்தி சித்தி யாம் எனத் தெரியினும் முன்னது பரத்தின் சத்தி ஈர்த்தெழும் சார்பினே யுடையது; பினதோ ஒத்த புத்தியால் ஓங்கிமேல் எழுவதுள் உணர்ந்தே, 37 3C) குழந்தையும் பாலனும். தாயின் ஒக்கலேச் சார்ந்தகைக் குழந்தையும், கையில் மேய தாய்நடை மேவிய பாலனும், போல ஆய பத்தியும் ஞானமும் அமர்ந்துள; அதனுல் து.ாய வாகிய அவற்றின்மெய்த் தகவுகள் தோன்றும். 373 I பத்தியின் பான்மை உரிமை யாகிய ஒருபரம் பொருளினைப் பிரிந்தே கருமை ஆகிய கதிகளில் கலங்கிநொந்தழிந்தார்; அருமை ஆப் அந்த உண்மையை அறிந்தபோ துன்னம் உருகி ஓடுவது உள்ளுறு பத்திஎன் றுணர்க. (106) 37.32 ஞானத்தின் மேன்மை. பிரிந்த அந்தவன் கிலேயையும் பேதையாப் உழந்து திரிந்த வெம்பவ நிலையையும் திரிபிலாது உணர்ந்து பரிந்த சிங்தையர் ஆகி அப் பரத்தினில் பதிந்து தெரிந்த தேசுடன் திறம்பெற நிற்பது தெளிவே. (107; 37 33 ஞானியை வானும் வணங்கும். ஞானம் ஆகிய மெய்த்திரு வுடையவர் நரரின் ஊன ளாவிய உடம்பிலுற் றிருப்பினும் உம்பர் தேன ளாவிய மலர்கொடு பணிகுவர்; சிறந்து வான ளாவிய புகழுடன் மகிழ்ந்துவீற் றிருப்பார். (108) 37 34. எமனையும் கடப்பார். அருந்த வப்பெருங் தகையவர் ஆற்றலே உணர்ந்து பெருங்த கைப்பெருங் தேவரும் பேதுறு வாரே: வருங்த வத்தைகள் யாவையும் மாய்த்து மாசின்றி இருந்த வத்தினே ஆற்றுவார் எமனேயும் கடப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/771&oldid=913516" இலிருந்து மீள்விக்கப்பட்டது