பக்கம்:வீரபாண்டியம்.pdf/773

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*726 வி ர ப ா ண் டி ய ம் 374. I பார் மேல் வாழ்வு நீர் மேல் குமிழி. பாரின் மேல்உழல் பல்பெரும் பிறவியும் தப்பிச் சீரின் மேலுயர் இவ்வுடல் சேர்ந்துளேம். எனினும், காரின் மேலுறு மின்னினும் கடிதயல் மறையும் ரிேன் மேலுறு குமிழியில் நிலைகுலைந்து ஒழியும், (II6) 3742 பலர் பாழாய் ஒழிகின்ருர். அன்ன தானபேர் அருமையும் சிறுமையும் உடைய இன்ன மெய்யினே எய்தியும் எதிர்வதை எண்ணுது உன்னி ஆயிர கோடிஎண் ணங்களே உள்ளே பன்னி எண்ணிவெம் பாழினில் ஒழிகின்ருர் பலரே. 37.43 உய்திபின் உளதோ: ஈன மானபுன் பிறப்பினில் இழிந்து ஒழியாது ஞான மானநன் மானுட யாக்கையைப் பெற்றும் ஆன பேற்றினே ஆய்ந்துடன் அடைந்திடாது அந்தோ: ஊன மாய்க்கழிந்து ஒழியினே உப்திபின் உளதோ? 37.44 ஊழியும் உய்யார். இந்த மானுடம் எளிதினில் எய்திட முடியாது: அந்தம் இல்லதோர் பிறப்பின் பின் அருந்தவப் பேற்ருல் வந்த தாம்.இது வாய்த்துள போதுமேல் பதத்தை உங்தி எய்திடாது ஒழிபவர் ஊழியும் உய்யார். (II9) 37 45 பெரிய பேதைமை. அரிய மானுட யாக்கையை அரிதினில் அடைந்தும் உரிய முத்தியை ஊக்கிமுன் உற்றிடாது ஒழிதல் பெரிய பேதைமை; பெறலரும் அமிர்தத்தைப் பெற்றும் தெரிய உண்டிடான் தெருவினில் கவிழ்த்ததை ஒக்கும். 37.46 கலம் ஒழிந்தனரே. கலத்தி ல்ைகருங் கடலினக் கடத்தல்போல் இப்புற் கலத்தி ல்ைபெரும் பவக்கடல் கடக்கலாம் அன்றி வலத்த வேருேரு வழியினும் வாய்த்திடாது அந்தோ! நலத்த யாக்கையை நண்ணியும் நலம் ஒழிந் தனரே. (121). புற்கலம்=உடம்பு. கலம்=கப்பல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/773&oldid=913520" இலிருந்து மீள்விக்கப்பட்டது