பக்கம்:வீரபாண்டியம்.pdf/774

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. கதி எய்திய படலம் 727 37.47 முத்தி கேர் எய்தும். எனது நான் எனும் இயல்பினே இடமற மாய்த்தே இனியன் ஆகிஎவ் வுயிர்கட்கும் இன்னருள் புரிந்தே அனக மாநெறி அமைவுடன் அமர்ந்தினிது ஒழுகின் நி:னய லாவகை நிலையுயர் முத்திநேர் எய்தும். (122). 37.48 உயிர் இன்பமயம். ஒப்பி லாதபே ரின்பம்ஒர் இடத்துள தாக ஒப்பி நீயுளம் மயங்கிடல்; உன்னுளே அதுதான் அப்பின் நீர்மையும் அமிர்துறு சுவையும்போல் என்றும் அப்பி நின்றுளது அவம் அறின் அதுமயம் ஆவாய். 37.49 உன்னை உணர்க. சச்சி தானந்த வடிவமாய்த் தழைத்துஒளி சிறந்தே எச்சம் இன்றியே எங்கணும் நிறைந்துள ஒன்றை நச்சி வேறயல் உள்ளதாய் நாடிநீண்டு அலேதல் கொச்சை யானபுன் ணகைக்கிடம் ஆகுமே குறிப்பின். 37.50 உள்ளம் தெளிக. பள்ளம் தோண்டிய இடத்தினில் பனிமழை பொழிய வெள்ளம் வந்துநேர் கிறைந்திடும். விதிமுறை ஒழுகி உள்ளம் தூயதாய்ப் பக்குவம் உற்றமைங் திருப்பின் தெள்ளி தாம்பரன் அருள்வெள்ளம் வந்துதேக் கிடுமே. 275 / பரம ஆனந்தம். நெஞ்சம் தூயதாய் நிலைபெற அமைந்துநன் னெறியில் தஞ்ச மாயமர் தண்ணளி யுடையவர்க்கு அன்றி வஞ்ச வேடத்தால் வாய்மதம் பேசலால் அந்த எஞ்ச லில்பர மானந்தம் எய்துதல் அரிதே. (126) 3752 பிறவி அறுக. எடுத்து வந்துள இந்தஒண் பிறவியால் இனிதாய் மடுத்தடைந்திடும் மாண்பயன் யாது?என வினவின் அடுத்த எந்தஒர் பிறவியும் அணுகிடாது அமுதம் உடுத்து றைந்துள பேரின்ப வுலகினை உறலே. (127,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/774&oldid=913521" இலிருந்து மீள்விக்கப்பட்டது