பக்கம்:வீரபாண்டியம்.pdf/778

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. கதி எய்திய படலம் காமவெம் பிறப்பில் ஆழ்த்தி காசங்கள் செய்யும்; அன்ன எமவா தனேகள் தம்மை இகந்தவர் உயர்ந்தார் அன்றே. சீலமே தெய்வத் திரு. 3764 ஆமிர்தம்கை இருக்க அத்தை அகலவிட்டு அழிவே செய்யும் உமிழியல் நஞ்சை உண்டுள் உயிர்ஒழி ஊனர் போலச் சமதமம் உடைய சீலம் தழுவிமேல் எழாமல் வெய்ய மமர் இயல் மருவி அந்தோ வன்துயர் வளர்க்கின் ருரே! இன்ப கலம் எய்துக. 7ே65 இல்ஒழுக் கிருந்து வந்த இனவிருந்து இனிது பேணி கல்ஒழுக்கு அமர்ந்து நின்று நாடிஇன் அருள் புரிந்து செல்ஒழுக்கு இயைந்து கின்ற செவ்வியோர் எவ்வம் நீங்கி எல்ஒழுக்கு உடைய இன்ப கிலேயமாய் இனிது நின்ருர், ஒழுக்கமே சுவர்க்கம். 37.66 சிலமே சுவர்க்கம் என்னும் தெய்வநல் திருவை எய்த மூலகா ரணமா யுள்ளது: அ.திலார் முடிவி லாத காலம் ஆலுைம் இன்பம் கண்டிலர் கழிந்து இழிந்து சாலவும் துன்பத்து ஆழ்ந்து தவித்தயர்ந்து உழல்வார் அம்மா! 731 (138) (139) (140) (141)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/778&oldid=913529" இலிருந்து மீள்விக்கப்பட்டது