பக்கம்:வீரபாண்டியம்.pdf/784

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. கதி எய்திய படலம் 737 ஒருவரும் பவங்கள் எய்தி உழல்கின்றேம்: ஒருங்கே அந்த அருவினை இரண்டும் நீங்கின் அமலவீடு அடைவம் அன்றே. (159) இன்பமும் துன்பமும். 3785 இன்பம்வந்து எய்தும் காலே இருங்களிப்பு எய்து கின்ருர்: துன்பம்வந்து உற்ற போது துடித்து அயர் கின்ருர் சூழ்ந்து முன்பு நாம் செய்து கொண்ட முழுவினைப் பயன் இரண்டும்: பின்பதில் வருந்தி நிற்றல் பேதைமை ஆகும் அன்றே. (160) விதைத்தே விளைவாய் வரும். 3786 நெல்லினே விதைத்த மாந்தர் நெல்லேயே அடைவர்: நேர்ந்து புல்லினே விதைத்தார் புல்லே பொருந்துவர்: புறத்துஒன்று எய்தார்: கல்வினை உடையார் இன்ப நலங்களே நுகர்வர்: நஞ்சாம் அல்வினை உடையார் ஆருத் துன்பமே அடைவர் அம்மா! (161) வினைப்பயன் விடாது. 3787 வி8ளப்புறு விளைவே அன்றி வேறுஒன்று விளேந்து வாரா; கிளேப்புற மூண்டு நின்று கிளர்ந்துமுன் விழைந்து செய்த இளேப்பறு வினைகள் தத்தம் இனப்பயன் ஊட்டி அன்றிக் களே ப்படைந்து ஒழியா: விணே களித்தலும் கவலும் எல்லாம். (I62) 93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/784&oldid=913543" இலிருந்து மீள்விக்கப்பட்டது