பக்கம்:வீரபாண்டியம்.pdf/786

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. கதி எய்திய படலம் பேரறி வடைந்து நின்று பெரும்பதம் பெறலாம்: அன்றிக் கூரறி வுடைய தேவர் குலத்திலும் கூடாது அன்றே. இருள் நீங்கி இன்பம் ஓங்குக. 3792 அருள் உளம் உடையன் ஆகி அறநெறி வழாது நின்று மருளுறும் எவ்வு யிர்க்கும் மறந்தும்ஒர் தீங்கு செய்யாது இருளற ஒழுகின் இன்பாம் என முனி இனிதி சைத்த பொருளுரை உணர்ந்து மன்னன்

  • பொருமியுள் உருகி நொந்தான்.

ஊமைமன் உருகி அழுதான். 3793 படுகொலை பலவும் செய்த பாதகன் எனக்கு முத்தி வடிவைநேர் காணு மாண்பு வாய்க்குமோ? எனம யங்கி கெடிதுநின்று அழுதான் மன்னன்: நிறைதவன் மீண்டு நோக்கி ஒடிவறு கருணே கூர்ந்தே உவந்து பின் இன்ன சொன்னன்: முனிவர் தேற்றினர். 3794 மன்னன் ஆய் நின்ற போது மருவலர் தம்மை வாளால் சின்னபின் னங்கள் செய்த செயலினை நினேந்து தேம்பல்! 739 (166) (167) (168)

  • அருள் சுரந்து ஞான முனிவர் போதித்து வந்த பொருள் உரைகளே எல்லாம் உள்ளம் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்த மன்னன் தனது பழைய நிலைமைகளே எல்லாம் நினைந்து இணைந்து பரிதாபமாய் நொந்து மறுகி உருகி யிருக்கிருன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/786&oldid=913547" இலிருந்து மீள்விக்கப்பட்டது