பக்கம்:வீரபாண்டியம்.pdf/789

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*742 வி ர பாண் டி ய ம் பிறந்தலை யாமல் செய்த பேரரு ளாளா! என்ன சிறந்தபுண் ணியங்கள் முன்னம் செய்தனன் நின்னேச் சேர? (176) உயர்கதி உற்றேன். 3802 தேவகின் திருவாய் வந்த தெளிந்தமெய்ஞ் ஞான வாசப் பூவலர் கங்கை என்னும் புனிதநீர் படிந்தேன்: வெய்ய பாவவெவ் வினைகள் எல்லாம் பற்றற ஒழிந்தேன்; என்றும் ஒவலில் பரமா னங்த உயர் கதி உற்று உயர்ந்தேன். (177) பிறவி நீங்கிப் பேரின்பம் பெற்றேன். 3803 தெள்ளமிர் தனைய தெய்வத் திருமொழி செவிகள் ஆர உள்ளுறப் பருகி உள்ளம் உயிர்எலாம் உருகி என்றும் தள்ளரும் பிறவி நீங்கித் தனித்தபே ரின்பம் துய்த்தேன்: வள்ளலே! எனப் பணிந்து மாதவன் தனைத் துதித்தான். (178). அருந்தவம் செய்க. 3804 உன் ஆனநீ உணர்ந்தாய்! உன்னுள் உறைந்தினி திருந்த இன்பம் தன்னையே அடைந்தாய்! வேறே சார்ந்ததாய் நினேந்து அயர்ந்தே என்னேநீ ஏத்து கின்ருய்! யானும்நீ யாவும் ஒன்றின் பின்னமே பேச்சுஎன்? பேசாது அருந்தவம் செய்போ என்ருன். (I79).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/789&oldid=913553" இலிருந்து மீள்விக்கப்பட்டது