பக்கம்:வீரபாண்டியம்.pdf/790

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. கதி எய்திய படலம் 743: ஞான யோகம் புரிந்தான். 3805 அம்மொழி அமையக் கேட்ட அரசனும் உணர்ந்து நீங்கிச் செம்மையாம் பொழில் புகுந்து சிறந்தஒர் இடத்து அமர்ந்து வெம்மைசேர் புலன்கள் ஐந்தும் வேரற வென்று ஞானப் பொம்மலோடு இருந்து யோகம் புரிந்தனன் போதம் ஒங்க. (180) சித்தித் திருவைச் சேர்ந்தான். 3806 உள்ளுறு கரணம் எல்லாம் ஒடுங்கின: உணர்வின் உள்ளே துள்ளுமா மனம்பு குந்து துடிப்பற கின்றது: என்றும் தள்ளரும் தறிபோல் மன்னன் தனித்தினிது உறைந்தி ருந்து தெள்ளிய யோக சித்தித் திருவினைச் சேர்ந்து நின்ருன். (181) முத்தி கிலே யுற்றன். 3807 ஞானமா நெறியின் கின்று நற்றவம் புரிந்து பல்லாண்டு ஆனமா தவர்க்கும் எட்டா அரும்பெறல் இன்பம் எய்தி * மோனகா யகய்ை முன்னம் முனைந்துவென் றிருந்தான்: இன்றும் மோனகா யகய்ை மூண்டு முத்தியில் முதன்மை யுற்ருன். ($82)

  • மோன நாயகன்=ஊமைத்துரை. அரசன்ஆய் இருந்த பொழுது மோனமாய் இருந்தவன் அதனைத் துறந்து ஞான நாயகன் ஆன பின்பு மோன நாயகனுய் அமர்ந்து மூத்திக் திருவை எய்தி நித்திய பேரின்பம் துய்த்திருந்தான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/790&oldid=913556" இலிருந்து மீள்விக்கப்பட்டது