பக்கம்:வீரபாண்டியம்.pdf/791

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

744 வி ர ப ா ண் டி ய ம் பேரின்பம் பெற்ருன், 3808 அருவினை என அமைந்த அரும்பெருங் தவங்கள் ஆற்றி இருவினை விளைவு நீங்கி இரவொடு பகலும் இன்றி ஒருமயம் ஆகி யுள்ள உயர்பர நிலையை எய்திக் கரைதெரி வருபே ரின்பக் கடலிடைக் களித்திருந்தான். (183} 3.809 சீவிய காவியம். விர மன்னவர் மெய்யருள் நெறியினே மேவிச் சார மாயுயர் பேரின்ப நிலையினைச் சார்ந்தார்: வார மாயவர் சரிதங்கள் வளமுற வரைந்து விர காவியம் என இது விளேந்தெழுந் ததுவே. (184) 38 IO இந் நூலின் பயன். இன்ன விரமாக் கதையினே இன்புறப் படித்தோர் அன்ன வர்க்கரும் பொருள்கொடுத்து அன்புடன்கேட்டோர். நன்ன யம்பெற வரைந்தவர் நயந்தவர் எல்லாம் பன்ன ரும்பயன் பெற்றுயர் பதத்தினே அடைவார். 381 வாழ்த்து. வாழி மாமழை வானவர் மாதவர் மறையோர் வாழி மாநிலம் மன்னவர் மன்னுயிர் யாவும் வாழி வீரமும் வண்மையும் வாய்மையும் அறமும் வாழி இந்தநூல் ஊழியும் வளமுடன் வளர்ந்தே. (186) 32-வது கதி எய்திய படலம் முற்றிற்று. ஆகக் கவி 3811. வீர முருகன் வெற்றி அருள்க. -ஆகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/791&oldid=913558" இலிருந்து மீள்விக்கப்பட்டது