பக்கம்:வீரபாண்டியம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gl நூ ல் மு. க. ம். கா வி ய சீ வி ய ம். உலகம் உயர்ந்தோரால் ஒளி பெற்று வருகிறது. உயிர் இனங்கள் அளவிடல் அரியனவாய் எங்கனும் பரந்து விரிந்து உள்ளன. இந்த இனங்களுள் எல்லாம் மனித இனமே தனி கிலேயில் உயர்ந்து யாண்டும் சிறந்து எவ்வழியும் தலைமையுடன் கிலவி யுளது. சிறந்த மனிதர் பிறந்து வருகிற மனிதருள் சிலரே சிறந்த மனித ராய் உயர்ந்து திகழ்கின் ருர். அரசர்கள், கவிஞர்கள். வள்ளல்கள், வீரர்கள், ஞானிகள் என இன்னவாறு பேர் பெற்று வருபவரே யாண்டும் சீர்பெற்று விளங்கி வரு கின்றனர். இந்த வரவுகள் அதிசய நிலையில் அரியன வாய் நேர்கின்றன. மேலோர் என்று எவரை ஞாலம் உவந்து புகழ்ந்து வதுகிறதோ, அவர் காலம் பல கழிந்து போயினும் யாதும் மறையாமல் யாண்டும் குறையாமல் எவ்வழி யும் இனியராய் நீண்டு என்றும் சீரோடு சிறந்து நிற் கின்றனர். அவருடைய பேரும் பெருமையும் சீரும் சிறப்பும் பார் எங்கும் பரவி வருதலால் யாரும் அவர் பால் பேரன்பு புரிந்து வருகின்றனர். நூல்களும் அவரைச் சால்போடு போற்றி வரு கின்றன. வழிவழியே அவர் ஒளிபெற்று வருகிருச். ஓவியக் காட்சி. ஒரு நாட்டுள் சிறந்து தோன்றிய மனிதரை அங் காட்டுச் சிற்பங்களும், ஒவியங்களும், காவியங்களும் என்றும் எவரும் எங்கும் நன்கு கண்டு மகிழும்படி கயமாய்க் காட்டி வியன விளக்கி வருகின்றன. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/8&oldid=913575" இலிருந்து மீள்விக்கப்பட்டது